ரமழானே ரமழானே
நீ ரஹ்மானின் கொடை தானே
அற்ஷின் வசந்தம் நீ அல்லவா
நபி அண்ணல் விரும்பிய நாள் அல்லவா
அல்லாஹ்வின் மாதம் நீ தானே
முப்பது நாள் மகத்துவமே
மூமின் அணியும் ரத்தினமே
1) ஆதம் நபி அன்னை ஹவ்வாவுடன்
முதன் முதலாக நோற்றதிந்த நோன்பல்லவா
மூஸா நபி தூர்ஸினாவிலே
வல்ல இறை பேச உடன் இருந்த மாண்பல்லவா
தூதர்கள் எல்லாம் நோன்பிருந்தார்
உம்மத் எல்லாம் தொடர்ந்திருந்தார்
காலமெல்லாம் நீ வாழ்கிறாய்
கடமை நோன்பு ஆகிறாய்
2) பசி என்பது கொடும் விஷம் போன்றது
பணம் படைத்தோரின் காதோரம் நீ கூறுவாய்
மனம் என்பது ஓடும் விலங்கானது
ஒரு கடிவாளம் தடையொன்று நீ போடுவாய்
இரவை பகலாக நீ மாற்றுவாய்
இறைவனை எப்போதும் நினைவூட்டுவாய்
வாயெல்லாம் உன் வாசமே
தூக்கம் கூட வணக்கமே
3) மனிதர்களை அந்த வான் நோக்கியே
நல்ல அமலாலே வழி காட்டி நீ உயர்த்துவாய்
அமரர்களை அணி அணியாகவே
இந்த பூமிக்கு வரச் செய்து நீ பார்க்கிறாய்
லைலதுல் கத்ராக நீ மாறுவாய்
தராவீஹ் வணக்கங்கள் நீ காட்டுவாய்
நோன்பு ஒரு மாதவம்
மாண்புகள் நிறைந்த காரணம்