திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!
சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!
ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் ளொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!
மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!
வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!
தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!