புனித ரமழான் மாதத்தின் பொருட்டால் வேண்டப்படும் “யாரஹ்மானே” எனும் முனாஜாத்
தமிழ் மேசும் மக்கள் வாழும் நிலமெங்கும் பக்தியுடன் பாடப்படும் இந்த புனிதப் பாடலை இயற்றியவர்கள், காயல்பட்டணம் நூருல் ஜூமான் முத்துச்
சுடர் மாத இதழின் நிறுவனர், அல்லாமா ஆஷிகுர் ரசூல் அல்ஹாஜ் முஹம்மது நூஹு தம்பி ஆலிம் ஜுமானி அவர்கள்
இவர்கள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வழித் தோன்றல் அல்லாமா அஸ்ஸெய்யிது அஹ்மது ஸாஹிப் பெரிய முத்து வாப்பா வலியுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) வழித் தோன்றலும், அல்லாமா நஹ்வி முஹம்மது இஸ்மாயீல் ஆலிம் முஃப்தி அவர்களின் பிரதம சீடரும் (kh)கலீபாவும் அவார்கள்
================================
யாரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே
இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால்
ரஹ்மத்தைச் சொரிவாயே (யாரஹ்மானே)
முந்திய பத்தினில் ரஹ்மத்தும் மத்திய
பத்தினில் குஃப்ரானும்
இன்னும் பிந்திய பத்தினில் இத்கையும் பொதிந்த
ரமழானைத் தந்தாயே (யாரஹ்மானே)
அஸ்ஸவ்முலீ வஅனல்லதி அஜ்ஸீ
பிஹி என்று மொழிந்தாயே
இந்த நோன்பெனக்காகும் நான்
கூலி அளிப்பேன் என்று நீ பகர்ந்தாயே (யாரஹ்மானே)
லைலத்துல் கத்ரி ஃகைரும்மின் அல்ஃபி
ஷஹ்ரென்று உரைத்தாயே
ஒரு ஆயிரம் மாதம் வணக்கத்தை விட
இவ்விரவை நீ மதித்தாயே (யாரஹ்மானே)
நோன்பு பிடித்தோம் தராவீஹ் தொழுதோம்
பல அமல்கள் செய்தோம்
எங்கள் வணக்கங்கள் தனையும் வேண்டுதல்களையும்
கபூல் செய்து அருள்வாயே (யாரஹ்மானே)
தைக்காவில் தொழுதோம் திக்ருகள் செய்தோம்
ஸலவாத்துகள் உரைத்தோம்
எங்கள் தையானே எம்மை ரமழானின் பொருட்டால்
சுவனத்தில் சேர்ப்பாயே (யாரஹ்மானே)
பிழை பொருப்போனுனையன்றி வேறாரும்
இல்லையே இல்லையே
பெரும் புகழுடையோனே இகபரவாழ்வில்
ஆதரித்தருள்வாயே (யாரஹ்மானே)
ஷெய்கு சுலைமான் ஸூதன் நூஹு தம்பியின்
இந்த முனாஜாத்தை
நல்ல ஷவ்குடன் படித்தோம் இஷ்குடன் கேட்டோம்
கையேற்றுக் கொள்வாயே (யாரஹ்மானே)
யாறப்பி ஸல்லி ஸல்லிம் அலா தாஹா
கைரிகல்கில்லாஹ்
தும்ம ஆலின் வஸஹ்பின் ஹிஸ்பின் லிரப்பி
தாபிஇ ஸூப்லில்லாஹ் (யாரஹ்மானே)