Humko Bulana Ya Rasoolallah - Humko Bulana Ya Habeeballah
Kabhi Tho Sabz Gumbad Ka Ujaala Hum Bhi Dekhenge
Humein Bul-wayenge Aaqa Madina Hum Bhi Dekhenge
எம்மை அருகழைப்பீர் யா ரசூலல்லாஹ்
எம்மை அரவனைப்பீர் யா ஹபீபல்லாஹ்
கண்ணின் கருமணியே காத்த மன்னபியே
அந்நாள் கண் பார்த்து எம்மை காக்கு நன் நபியே
பசுமை மன்ற நிழல் வாழ்
நபிகள் ரவ்ழா என்று காண்போமோ
இசைந்தே எங்கள் நபிகள் அழைத்திடுவார்கள்
சென்றே காண்போமே
Dhadak Uthega Ye Dil Ya Dhadakhna Bhool Jayega
Dil-e-Bismil Ka Uss Dar Par Tamasha Hum Bhi Dekhenge
1) உணர்வு பொங்கி எழவே
உள்ளத் துடிப்பு துள்ளி எழுந்தோங்க
கனவில் யானும் கண்ட
காட்சி யதனை கண்ணால் காண்போமோ (இசைந்தே)
Adab Se Haath Baandhay Unke Rozay Par Khaday Honge
Sunehri Jaliyon Ka Yun Nazara Hum Bhi Dekhenge
2) பணிந்தே கைகள் கோர்த்தே
நின்று நபியின் சுவனப் பூங்காவை
அணியாயிலங்கும் தங்க வேலியதனை
கண்ணால் காண்போமே (இசைந்தே)
Barasti Gumbad-e-Khizra Se Tak-raati Hui Bundhein
Wahan Par Shan Se Baarish Barasna Hum Bhi Dekhenge
3) மரகதமாம் முகட்டில் பட்டுத் துள்ளும்
பனி மழைத் துளிகள்
பரவசமோங்கி அந்த அழகை அள்ள
விரைந்தே செல்வோமே (இசைந்தே)
Dar-e-Daulat Se Lautaya Nahin Jaata Koi Khaali
Wahan Khairat Ka Batna Khudaya Hum Bhi Dekhenge
Guz-aaray Raat Din Apne Issi Umeed Per Hum Ne
Kissi Din Tou Jamal-e-Ruay Zaiba Hum Bhi Dekhenge
4) அருளைத் தேடி பொருளை நாடி அங்கு
சென்றவர் எவரும்
வெறுங் கையாக என்றும் திரும்பியதில்லை
யாமும் செல்வோமே (இசைந்தே)
Dum-e-Rukhsat Qadam Mun Bharke Hain Mehsoos Karte Hain
Kisse Hai Jaake Laut Aanay Ka Yaara Hum Bhi Dekhenge
5) அல்லோடு பகலுமாக நாடும் இங்கே
காத்திருப்போமே
சொல்ல ஒண்ணாத அழகை காண ஒரு நாள்
நாமும் செல்வோமே (இசைந்தே)
Pohonch Jayeingay Jiss Din Ae Ujaagar Unke Qadmon Mein
Kisse Kehte Hain Jannat Ka Nazara Hum Bhi Dekhenge
6) நன்னாள் வருமே அன்னாளில் நன்னபிகள்
பாத இணை மலர்கள்
கண்ணாரக் கண்டு முத்தி பாவம் போக்கிட
நானும் செல்வேனே (இசைந்தே)
7) கண்கள் இரண்டும் என்றும் கண்டிராத
கவினுறுங் காட்சி
மண் பூவில் சுவனமான மதீன ரவ்ழா
காணப் போவோமே