மீ லாதுன் நபி வரவை எண்ணி உள்ளம் துள்ளு தே என் தோழா
பா லோடு தேனும் கலந்த பாங்காய் பண்கள் பாடி மகிழ்வோமா
மா தம் ரபீஉல் அவ்வல் காண உள்ளம் தேடுதே என் தோழா
மா தவ நபிகள் உதயம் எண்ணி உவகை பொங்குதே என் தோழா
மகிழ்வாய் என்றும் நம்மைப் பேண அகிலத தூதர் வருவார்கள்
துதிப்பாய் நபியாம் பேர்கட்கெல்லாம் பதியாம் நயினார் வருவார்கள்
====================
திடுக்கம் சூழ திகைக்கும் பேர்கள் இடுக்கண் தீர்க்க வருவார்கள்
அடுத்து நின்று அவலம் போக்கி அல்லா உடனே சேர்ப்பார்கள்
இருளில் உழலும் பேரே இனியும் இன்னல் இலையே மகிழ்வீரே
அருளாம் நபிகள் அல்லா உடனே அன்போடிணைத்து அருள்வாரே
====================
போக்கிடம் அற்று புலம்பிடும் பேர்கள் ஏக்கம் தீர்க்க வருவார்கள்
திக் ககன்ற எளியோர் தம்மை பக்கம் வைத்து காப்பார்கள்
நாதி அற்றவர் வறுமை உழன்றவர் பீதி அற்று இருப்பீரே
நாதர் அஹ்மதர் அன்பினில் என்றும் ஆதரவு கொள்வீரே
====================
இதய வேந்தர் உதயம் எண்ணி உவகை உந்த உரைத்திடுவோம்
மதனி மன்னா வருக இங்கே "மர்ஹபா வா மர்ஹபா"
நன்னபி நாயகர் உதயம் எண்ணி மண்ணில் மகிழ்ச்சி கொள்வீரே
பன்னிற தீபம் ஒளிர எங்கும் இன்புற "மர்ஹபா " சொல்வீரே
====================
மா நபி தோன்றிய நாள் இந்நாளில் நாம் மிக மகிழ்வு கொள்வோமே
இன்று மகிழ்வுறும் பேறி ல்லார்க்கு என்று மகிழ்வு தாம் வருமோ
இன்றின் னாளில் மகிழாப் பேர்கள் என்று எங்ஙனம் மகிழ்வாரோ
வென்றி நபியின் காதலர் நாமோ இன்றுமன்றும் மகிழ்வோமே
இல்லந்தோறும் ஒளி விளக்கேற்றி உள்ளக் களிப்பை காட்டிடுவோம்
நல்லார் வரவால் நாம் எல்லாரும் கொடிகள் ஏந்தி பாடிடுவோம்
மன்னர் முஹம்மது வரவால் உலகில் இருள் ஒழிந்து போனதுவே
சொன்னம் போன்ற அன்னவர் ஒளியில் நாமும் நன்னயம் காண்போமே
எங்கள் இதயமோங்கு நாதர் இங்கு வந்து தோன்றியதால்
இருள் அழிந்து ஒளிமிக வந்து அருளால் உளமே நனைந்ததுவே
====================
எந்தந்தாயே சஉது ஹலீமா எத் தவந்தான் பூண்டனையோ
அந்தமுள்ள பாலகர் அஹ்மதர் உந்தன் மலர் மடி தவழ்ந்தனரே
நெஞ்சம் நிறைந்த என்னபி நாதர் பிஞ்சில் நின் நெஞ் சமுதுண்டார்
விஞ்சை கண்ட ஹலீமா தாயே மிஞ்சு புகழ் கண்டு யர்ந்தனையே
====================
பச்சைக் கொடிகள் கை கைகளில் தாங்கி மிச்சப்புகள் ஸலவாத்தினை ஓதி
பாசமுடன் நடப்போம் நாமும் ஆமினாவின் வீடு தேடி
உயர்த்திப்பிடித்த கொடிகள் உடனும் உதடுகள் உதிர்க்கும் வாழ்த் துடனும்
பதி நபி அன்னை ஆமினா இல்லம் கருதி நடப்போம் காதலர் நாமே
====================
அண்ணல் நபியின் உண்மை நேசர் நமக்கேப்போதும் மகிழ்வேதான்
மன்னான் தோழர் உம்மை அன்று ஹவ்தின் அண்மையில் கான்பாரே