Anbaana Nenje


LYRICS


அன்பான நெஞ்சே உணர்வாயே நீ
நபி இல்லையென்றால் உலகம் இல்;லை
இறை ஒளியானவர் எங்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹ்
அன்பின் வழி வந்தவர் எங்கள் ரஸூலுல்லாஹ்

கோடி கோடி அழகும் அவர் அழகாலே உண்டானதன்றோ
வானம் அர்ஷூம் குர்ஸூம்
அவர் ஒளியாலே உண்டானதன்றோ
சொல்வீர் ஸலவாத்து அவர் பேரிலே
கண்னின் மணியானவர் எங்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹ்
அன்பின் வழி வந்தவர் எங்கள் ரஸூலுல்லாஹ்

உம்மியாக இருந்தார்
கல்வி எவரிடமும் அவர் பயின்றதில்லை
மேதையாக திகந்ந்தார்
யாரும்; அவர்களுக்கு நிகராக இல்லை
ஞானிகளின் நாயகர் எங்கள் ரஸூலுல்லாஹ்
இறை ஒளியானவர் எங்கள் ரஸூலுல்லாஹ்
அன்பின் வழி வந்தவர் எங்கள் ரஸூலுல்லாஹ்
கண்னின் மணியானவர் எங்கள் ரஸூலுல்லாஹ்
ஞானிகளின் நாயகர் எங்கள் ரஸூலுல்லாஹ்