கண்முன் நீரே தாஹா! யாநபியே! யா ரஸூலே!
உன்முகம் காணும் ஆசையில் நானும் வாழுகிறேன் மகானே
கண்முன் நீரே தாஹா ஹோ
உலாவும் தென்றல் சதாவும் பாடும்
வெண்மனி வீசும் கஸ்தூரி வாசம்
அன்பாக வில்லும் அழகாக சொல்லும்
என் வாழ்வில் நந்நாளும் வேண்டும்;
எம் பெருமானே வாழ்க்கையில் நானும் தேடுகிறேனே மகானே
கண்முன் நீரே தாஹா! யாநபியே! யா ரஸூலே!
சன்மார்க்கம் தந்த சர்தாரே நானும்
ஸலாமும் கூறி பண் பாட வேண்டும்
பொன்னான உங்கள் பொற்பாதம் தன்னை
கண்ணாலே தொட்டு கொண்டாட வேண்டும்
என் மனம் தேடும் ஆசையில் நானும் பாடுகிறேனே மகானே
கண்முன் நீரே தாஹா! யாநபியே! யா ரஸூலே!