Kunhu Dhatthile


LYRICS


குன் ஹு தாத்திலே ரகசியப் பொருளே
லைஸ க மிஃத்லிஹி ஷைஆனவனே
கமாலுள் ஆலம் ஸிர்ரனதிலே - அல்லாஹு
ஹூவே நீ அல்லாஹ் - அல்லாஹ் தாத்தே ஹூ அல்லாஹ்
அல்லாஹு - ஹூ - ஹூ - ஹூவே நீ அல்லாஹ்
அல்லாஹ் தாதே ஹூவல்லாஹ்

மர்த்தபதான அமாவெனும் இருளில்
கர்த்தன் தனை வெளியாக்கிட நினைத்தல்
ஒருத்தனாய் இருந்தோர் ஒளிவினை படைத்து
நூரு முஹம்மது என்றதை அழைத்து
அஹ்மது என் மழ்ஹறு என்றுரைத்து
மீமினை வைத்தான் அஹதுக்கிடையிலே

தன்னை வெளியிட தனzஸ்ஸுளில் தங்கி
குன் என்ற வாக்கியம் கடல் அலை பொங்கி
மண்ணையும் விண்ணையும் மலை கடல் முழுவதும்
சந்திரன் சூரியன் ஆலங்கள் அனைத்தும்
குல்லு ஷையின் மின் நூரீ எனவே
சொல்ல வைத்தான் நபி நாதரின் நாவிலே

நூரு முஹம்மதை இறையவன் பார்த்து
நான் யார் என்றொரு கேள்வி உண்டாக்க
நூறது வெட்கிட்டு சஜ்தா செய்து
கூறிடும் ரப்பே அஹதோன் நீயே
ஈடில்லான் மகிழ்ந்துரைத்தான் இதை பார்த்து
அக்மல் உஜூதாய் இருப்பாய் புவியிலே
 

அப்தேன்ற நூருக்கு தொழுகையை விதித்தான்
தொழுகையின் ரூபத்தில் அஹ்மதை அமைத்தான்
அலிப் அது நிலை என்றும் - ஹே ருகூவென்றும்
மீம் ஸஜ்தாவென தால் இருப்பென்றும்
ஆலத்தின் அற்புத ரகசியம் எல்லாம்
அமைத்தான் அஹ்மதின் தப்சீர் அதிலே

லவ்லாக லமா க்ஹலக்துள் அfப்லாக்
அவ்வலாய் ஆதம் ஓதின வாக்கு
செவ்வையாய் அஹ்மதில் மீம் அதை நீக்கு
திவ்விய ரகசியம் தன்னையே நோக்கு
எவ்வித ஆலத்தை படைத்தான் ரப்பு
ஏக பராபரன் குத்ரத்ததிலே

சூரிய பந்தன் சுழி முனை அதிலே
ஜோதி உன் கிண்தில் சுக வாரியிலே
நாதாக்கள் நடன் செயும் கொலுவிலே
ராகம் பாடி நின்றாய் மலகூதில்
பாரவன் கௌதுள் அஃழம் நின்றாட
ரஹ்மானிய்யாஹ் கோட்டை நடுவிலே

ஆதத்தை வைத்தாய் ஆலம் அருவாஹில்
அவரில் புகுந்தாய் அஸ்மா ஸிபாத்தில்
வேதத்தை விரித்தாய் நபிமார்க்கிடையில்
மேலான மணி விளக்கை மிஃராஜில்
சாலோபர் நபிகளதாய் இர்பானில்
ஹமீதுள் ஆலம் அர்ஷே பரிய்யிலே

அமாவெனும் இருளில் அரூபியதாகி
அலிபெனும் உஜூதில் அனேகமாகி
நூருல் அஹ்மதியாவினில் நின்று
மழ்ஹருல் ஆலம் பல வடிவாகி
நுக்தினில் ஹக்கு வெளியாகிட நாடி
நூனினை வைத்தான் ஜம்ஹூத்ததிலே

லாஹூதில் இருந்து ஜபறூத்தின் ஆலம்
ஜபரூதில் சமைந்த மலகூதின் ஆலம்
ஜம்ஹூதில் அமைந்து ஆலம் அருவஹாய்
ஆலம் மிதால் ஆலம் அஜ்சாமாய்
ஆதத்தை படைத்தான் - ஆலம் இன்ஸானாய்
நூரு முஹம்மதை வைத்தான் அதிலே