Annal Nabiye


LYRICS


அண்ணல் நபியே உங்கள் அழகை ஆண்டவன் ரசித்தான்
அங்கம் அங்கமாய் தங்கள் உருவை அருள்மறை உரைத்தான்
எங்கள் நபியே மிஃராஜ் இரவு ஏகன் ஏன் அழைத்;தான்

தன்னில் இருந்தே மின்னும் ஒளியை
தலைவன் தான் எடுத்தான்
அந்த ஒளியால் தங்கள் உருவை ஆதியாய் சமைத்தான்
வானம் முதலாய் ஆனவையெல்லாம் அதற்குள்ளே வகுத்தான்
பேரழகராம் யூஸூப் நபிக்கு பேரெழில் தந்தான்
அந்த அழகோ தங்கள் ஒளிவால்ஆனதே என்றான்

வானம் பார்த்த உங்கள் முகத்தை பார்க்கிறோம் என்றான்
என்னைக் காண உங்கள் கண்கள் மழுங்கிடாதென்றான்
வேதம் ஓதும் உங்கள் நாவில் வேந்தனே உரைத்தான்
உங்கள் நெஞ்சை என்றும் விரிவாய் ஆக்கினோம் என்றான்
உங்கள் முதுகில் உள்ள சுமைகள் இறக்கினோம் என்றான்

உங்கள் புகழே என்றும் பரவ உயர்த்தினோம் என்றான்
உங்கள் பெயரை சொல்லி அழைக்க இறைவனே மறுத்தான்
உங்கள் குணத்தை போற்றிப் புகழ்ந்து 
உயர்ந்ததாய் உரைத்தான்
உங்கள் உறக்கம் உங்கள் விழிப்பை மறையிலே பதித்தான்
உங்கள் செயலோ மன்னன் செயலாய் இருப்பதாய் உரைத்தான்

உங்கள் கரமோ தன் கரமென்று ஓரிரை சொன்னான்
நீங்கள் எறிந்த மண்ணைத் தானே எறிந்ததாய் சொன்னான்
நீங்கள் வசித்த மக்கா நகர் மேல் சத்தியம் செய்தான்
நீங்கள் அணிந்த போர்வை அதையும் 
நெறி மறையில் சொன்னான்
உங்கள் மீதே என்றும் ஸலவாத்தை உரைப்பதாய் சொன்னான்