Chandranum Eedahuma


LYRICS


சந்திரனும் ஈடாகுமா சங்கை நபி முகம் நோக்கினால்
சூரியனும் ஒளி வீசுமா தூய நபி உடல் நோக்கினால்

மாநபி கால் பட்ட பூமி மகிமைக்கு நிகர் சொர்க்கமில்லை
மாதவர் கைபட்டதாலே மறுமாசம் அது போவதில்லை
மன்னர் நபி இதழ் பட்டதால் ஹுஸைனார்க் கீடில்லையே

கோன் நபியை பெற்றதாலே ஆமினா போல் தாயுமில்லை
தாலாட்டி பாலூட்டினாரே ஹலீமாவின் புகழ் யார்க்குமில்லை
பண்பு நபி மகளானதால் ஃபாத்திமா போலில்லையே

அன்பு நபி அணிகின்ற ஆடை அந்த உடை போல் ஏதும் இல்லை
உம்மி நபியை சுமந்ததாலே ஒட்டகைக்கு விலை ஏதும் இல்லை
நிழல் தந்த மேகத்துக்கே நிகரான குடை இல்லையே

வள்ளல் நபிகள் பிறந்ததாலே மக்கா போல் ஊர் ஒன்றும் இல்லை
கன்னல் நபி வலம் வந்ததாலே கஃபா போல் இறை வீடு இல்லை.
நாயகமே! தொழ வைத்ததால் நபவி போல் பள்ளி இல்லையே
தங்க நபி தவம் செய்ததாலே ஹீரா போல் குகை ஏதும் இல்லை
உண்மைநபி ஒளிகின்றதாலே தௌரை போல் இடமொன்றும் இல்லை.
செம்மலரைக் காத்து நின்ற சிலந்திக்கும் நிகரில்லையே