காணும் பொருள் யாவிலும் யா காதிர் வலி
காண்கின்றேன் வாழ்விலே யா காதிர் வலி
நாடினேன் ஓடி வந்தேன் நாட்டத்திலே
மாநபி பேரரே யா காதிர் வலி
வேதனை தீர்ந்திடவே வேண்டி இங்கே வந்துவிட்டேன்
சோதனை சூழ்ந்திடவே சோர்ந்து இங்கே நின்று விட்டேன்
இன்னும் ஏன் தாமதமோ தாரும் எங்கள் காதிர் வலி
வந்தவர் யாரும் வெறும் கையுடனே சென்றதில்லை
சிந்தனை செய்தவர்கள் சூனியமாய் நின்றதில்லை
மாந்தருள் மாணிக்கமே மாணிக்க பூ காதிர் வலி
காலங்கள் பாடும் உங்கள் காவியத்தை காலமெல்லாம்
ஞாலங்கள் தேடும் உங்கள் ஞானரசர் போதமெல்லாம்
சீலரே செம்மலரே வேந்தரே யா காதிர் வலி