அல் அமான யாரஸுலல்லாஹ் அஷ்ஷஃபாஅத்த யாரஸுலல்லாஹ்
அர் ராஹத்த யாரஸுலல்லாஹ் அல் ஹலாஸ யாரஸுலல்லாஹ்
சொர்க்கத்தில் வாழும் மக்கத்து நிலவே யாரஸுலல்லாஹ்
உங்கள் சுந்தர வதனம் எப்படியிருக்குமோ யாரஸுலல்லாஹ்
சொல்லாலே அதனை சொல்ல முடியுமோ யாரஸுலல்லாஹ்
இந்த கண்ணாலே அதனை காண முடியுமோ யாரஸுலல்லாஹ்
தந்தையின் முகத்தை நீர் பார்த்ததுமில்லை யாரஸுலல்லாஹ்
பெற்ற தாயின் துணையும் நீடித்ததில்லை யாரஸுலல்லாஹ்
துன்பத்தின் இறுதி எல்லைக்கு சென்றீர் யாரஸுலல்லாஹ்
பெரும் துயரத்தையே அங்கு வாழ்வாக கண்டீர் யாரஸுலல்லாஹ்
தந்தையின் மண்ணறை காணச் சென்றீர் யாரஸுலல்லாஹ்
அங்கு தாயையுமிழந்து தனிமையாகினீர் யாரஸுலல்லாஹ்
எத்தனை துன்பம் எத்தனை துயரம் யாரஸுலல்லாஹ்
அதை எப்படியேற்று அமைதிக் கொண்டீரோ யாரஸுலல்லாஹ்
தாயிஃப் நகர மக்கள் தந்த கொடுமையினை யாரஸுலல்லாஹ் அதை
தாங்கி நின்ற விதம் என்னென்று சொல்வேன் யாரஸுலல்லாஹ்
விண்ணும் அழுததிந்த மண்ணும் அழுததே யாரஸுலல்லாஹ்
படித்த கண்ணும் அழுதழுது கண்ணீர் வடிக்குதே யாரஸுலல்லாஹ்
அண்ணல் உங்கள் அழகை காணாது யாரஸுலல்லாஹ்
எந்தன் ஆவி பிரிந்தாலும் அமைதி கிடையாது யாரஸுலல்லாஹ்
கொஞ்சும் அழகே கோடி நிலவே யாரஸுலல்லாஹ்
கெஞ்சி கெஞ்சி பாடியும் கேளாத நிலை ஏன் யாரஸுலல்லாஹ்
பாலையில் பிறந்து பாடிய குயிலே யாரஸுலல்லாஹ்
பாதம் காணவே பாடி அழைக்கிறேன் யாரஸுலல்லாஹ்
தேடிடும் என்னை தெரிய வில்லையோ யாரஸுலல்லாஹ்
இதை தென்றலும் வந்து சொல்ல வில்லையோ யாரஸுலல்லாஹ்
சுவனத்தின் அழகே சுந்தர வடிவே யாரஸுலல்லாஹ்
மௌனத்தில் நிலவும் இன்பத்தின் ஒளியே யாரஸுலல்லாஹ்
கவனத்தில் என்னை காண்பதெப்போ யாரஸுலல்லாஹ்
உங்கள் காலடி காட்சி தருவதெப்போ யாரஸுலல்லாஹ்
பாரினில் நான் இனி வாழும் நாளிலே யாரஸுலல்லாஹ்
தங்களை பார்த்து நல்லாசிகள் வாங்கிட வேண்டும் யாரஸுலல்லாஹ்
பால் முகம் தன்னை பார்த்து மகிழனும் யாரஸுலல்லாஹ்
உங்கள் பாதத்திலே ஒரு முத்தமிட வேண்டும் யாரஸுலல்லாஹ்