அலையாடும் கடலின் ஓரம்
அரசாளும் நாகூர் மீரான்
என் தலை மீதில் உங்கள் பாதம்
தாங்கேனும் ஷாஹே மீரான்
எஜமான் எம்மான் பெருமான் கோமான்
வெள்ளிக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வருவேன்
என் வள்ளல் உங்கள் உள்ளம் உருக பிள்ளை அழுவேன்
நான் காணிக்கை தந்திட நிதியில்லை
உங்கள் கால்களை விட்டால் கதியில்லை
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி – பாவா
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி
வெள்ளிக் கிழமை வாரந்தோறும் வருகின்றேன்
என் வேதனை மூச்சை புயலாய் அங்கு விடுகின்றேன்
கொள்ளை இன்பம் தருவீர் என்று நம்புகிறேன்
ஒரு குறிக்கோள் உண்டு நிறைவேறாமல் வெம்புகின்றேன்
நான் கவலை சேற்றில் கிடக்கின்றேன்.
நீர் கைகொடுப்பீர் என இருக்கின்றேன்
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி – பாவா
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி (வெள்ளிக்கதவை)
உற்றார் பெற்றார் உறவினர் எல்லாம் நீரே எனக்கு
யா காதிர் வலி பாவா.. யா யூஸுப் வலி தாதா
யா சுல்தான் பீவி அம்மா
அவர் உதரிடுவார் நீர் உதவிடுவீர் அருள் கரத்தால் எனக்கு
அருமை மகனார் யூஸுப் நாயகம் பொருட்டால் எனக்கு
திரு மருமகள் சுல்தான் பீவி நாச்சியார் துணையால் எனக்கு
என் உள்ளத்தை புரிபவர் யாருமில்லை
உங்கள் உள்ளத்தின் கருணையைக் காட்டிடுவீர்
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி – பாவா
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி (வெள்ளிக்கதவை)
இரக்கம் கொள்ள வேண்டும் அடியேன் கண்ணீர் வடித்தேன்
யா காதிர் வலி பாவா.. யா யூஸுப் வலி தாதா
யா சுல்தான் பீவி அம்மா
அலையாடும் கடலின் ஓரம்
அரசாளும் நாகூர் மீரான்
என் தலை மீதில் உங்கள் பாதம்
தாங்கேனும் ஷாஹே மீரான்
எஜமான் எம்மான் பெருமான் கோமான்
இரக்கம் கொள்ள வேண்டும் அடியேன் கண்ணீர் வடித்தேன்
எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்
நித்தமும் உங்கள் வாசலில் நின்று கைகளை ஏந்தும் வேலை
நீதரின் பார்வையில் நீதிகள் பல்கும் காதிர் ஒலியின் சோலை
மீரான் காதிர் மீரான்.. மீரான் மீரான் காதிர் மீரான்
மீரான் மீரான் ஷஹென்ஷா மீரான்
இரக்கம் கொள்ள வேண்டும் அடியேன் கண்ணீர் வடித்தேன்
எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்
வருவோர்க்கு வழங்கும் அதிபதி
வற்றாத ஞான அருள் நிதி
ஒளியாக வருமே ஓர் சுதி
ஓடோடி வருவேன் உம் பதி
மறுக்காமல் தருவீர் நற் கதி
மாணிக்கப்பூரின் பூபதி
மங்காமல் இலங்கும் சுடர் விழி
மஹாராஜர் பாதம் தான் பிடி
மல்லிகைப் பூவின் வாசம் வீசும் மகிமை வலியை நாடு
கொஞ்சும் இசையில் நெஞ்சை திறந்து கோகுல தொனியில் பாடு
கஞ்சே சவாயியை நாடு.. கஞ்சே சவாஹியை நாடு..
கஞ்சே சவாயியை நாடிய பேர்களின் காரண கதையைக் கேளு
நீதரின் பார்வையில் நீதிகள் பல்கும் காதிர் ஒலியின் சோலை
மீரான் காதிர் மீரான்.. மீரான் மீரான் காதிர் மீரான்
மீரான் மீரான் ஷஹென்ஷா மீரான்
இரக்கம் கொள்ள வேண்டும் அடியேன் கண்ணீர் வடித்தேன்
எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்
என் ஏந்தலே உங்கள் வாசலை நம்பி அடியேன் இருப்பேன்
கருணைக் கடலே கவிதை என்னும் சொல்லால் தொடுப்பேன்
உங்கள் கல்புக் கனியை நிச்சயமாக நானும் பெறுவேன்
அதில் எனக்கும் உண்டு பாக்கியம் இந்த அடிமை உங்கள் பைத்தியம்
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி – பாவா
காதிர் வலி எனக்கும் காட்டும் வழி