என் ஆசை நெஞ்சம் தேடுதே


LYRICS


என் ஆசை நெஞ்சம் தேடுதே
யா ரஸூலல்லாஹ் உங்களை ஆசை நெஞ்சம் தேடுதே

கருணை உள்ளம் பொழியும் திங்கள் புகழை பாட ஏங்குதே
அடிமையானேன் அஹ்மதே உம் அருமை பாதம் காணவே
மன்னரே எம் அண்ணலே மதீன வாசல் திறக்குமா
தரிசனம் தான் கிடைக்குமா

சுவன மீதில் சுடரும் ஜோதி மதீனமெங்கும் வாழுதே
இதயம் ஏங்கி எழுந்த ராகம் புதிய கானம் பாடுதே
முஹம்மதே என் முழு மதியே - முர்ஷிதே என் முழு மதியே
இனிமை வாழ்வில் வீசுமா - இன்னல் நீங்கி போகுமா

லா இலாஹ இல்லல்லாஹு - ஹூவில் இன்பம் இன்பமே
யா ரஸூலல்லாஹி என்ற சொல்லில் ஞானம் பொங்குமே
அமுதமே எம் அஹ்மதே - அகிலம் போற்றும் தீபமே
மகிமை ஓங்கும் ஜீவனே