கவி ஆக்கம்: முத்து தைக்கா அல்ஹாஜ் யஹ்யா முஹ்யித்தீன் பக்ரி அவர்கள் (துபாய்)
Chorus: Muhammad Baqir, Qadrunnisa & Fathima
Salli Wa Sallim Alan Nabi
Maa Daama Hubbuka Yaa Rabbi
Akrim Aala Khairin Nabi
Zinata Arshika Ya Rabbi
உலகம் பிறந்தது யாராலே...நம்
உண்மை முஹம்மது நபியாலே
இதயம் மகிழ்வது யாராலே...நம்
இறுதித் தூதர் நபியாலே...(உலகம்)
1. ஒப்பிலா இறையின் தூதுவராய் - இந்த
உலகுக்கு அருளாய் திகழ்ந்தீர்கள்
அப்துல்லாஹ் ஆமினா பாலகராய் - இந்த
அவனியில் அழகாய் பிறந்தீர்கள்
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
2. இறைவன் ஒருவன் என்றீர்கள் - அவன்
இணை துணை அற்றவன் என்றீர்கள்
இறுதித் தூதராய் வந்தீர்கள் - எங்கள்
இன்னலை துடைக்க உழைத்தீர்கள்
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
3. மலைகள் நிறைந்த மக்கத்திலே - கற்
சிலைகள் சூழ்ந்த கஃபாவை
பிழையாய் வணங்கிய மானிடரை - தம்
உழைப்பால் மாற்றிய உத்தமரே...
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
4. இருபத்து மூன்று ஆண்டுகளில் - இறை
அருளிய மறையாம் குர்ஆனும்
அறுபத்து மூன்று ஆண்டுகளில் - உம்
அருளுரை எமக்கு வாழ்க்கையன்றோ....
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
5. சொர்க்கம் செல்வது யாராலே....நம்
சுந்தர நபிகளின் பொருட்டாலே...
ஹக்கனை அடைவது யாராலே...நம்
ஹாத்தமுன் நபிகளின் பொருட்டாலே
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
6. மடமை மறைந்தது எதனாலே....நம்
மஹ்மூதர் நபி வரவாலே....
மனிதனாய் வாழ்வது யாராலே....நம்
மன்னர் முஹம்மது நபியாலே
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
7. பெண்மை வாழ்வது யாராலே ....எங்கள்
பெருமான் முஹம்மது நபியாலே
விதவை மறுமணம் யாராலே....எங்கள்
வேந்தர் முஹம்மது நபியாலே
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி....தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
Additional stanzas including Salawath Shareef were added as per the ordinance & blessings of Hazrath Jaleel Muhyiddeen Qaadiri (Tawwalallaahu Hayaatahu Bi Sihhathin Wa Aafiya)