பூ நபி நேசமே - பூவிலே சுவாசமே
கவி: ஐனுல் (Z)ஜாஹிரா ஆலிமா முஅஸ்கரிய்யா
பூ நபி நேசமே
பூவிலே சுவாசமே
நாளை மஹ்ஷரிலே
தங்கள் நிழல் வேண்டுமே
கண்மணி கண்மணி
எம் உயிர் கண்மணி
என்றும் உம் பாதமே
தேடும் அடைக்கலமே
கண்மணி........ கண்மணி.......
ஒளியின் ஒளியே!
நும் திரு வதனம் நான் காணனும்
கருவின் உருவே!
உம் காதலிலே கரைந்தோடனும்
தங்கள் பரிவில்லையேல்
எங்கள் நிலை என்னவோ...?
உங்கள் கடைப்பார்வையே
எங்கள் உயர்வல்லவோ
எமின் உயிரே! நிறைமதியே!
செம்மலரே! வருவீரே!
(பூ நபி)
அருளின் அருளான
தங்களுயர் அருட்பார்வையில்
இருளின் இருளான
எம் பவங்கள் கரைந்தோடணும்
தாங்கள் வரவில்லையேல்
இங்கு நாமில்லையே
உங்கள் அருளாசியே
எங்கள் வரமல்லவோ
கதிரே! உயிர்த்தென்றலே!
எம் ஜீவனே! வருவீரே!
(பூ நபி)
உயிரின் உயிரே
எம் இரு உலகின் கண்ணியமே
அழகின் அழகே
இம்மானிடரின் மகத்துவமே
எங்கள் வாழ்வாதாரம்
உங்கள் கரத்திலல்லவா
தங்கள் மீதுயர் ஸலவாத்
எம்மை சுவனம் சேர்க்குமே
கனியே! கண்ணின் மணியே!
கனிரசமே! வருவீரே!