ஜுத் பி லுத்பிக யா இலாஹீ முனாஜாத்


LYRICS


அமீருல் முஃமினீன் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வல்ல நாயனிடம் மனமுருகி இறைஞ்சிய

ஜுத் பி லுத்பிக என்ற முனாஜாத்  - அன்னவர்களின் உரூஸ் முபாரக்

 

அல்லாஹ்விடம் மனமுருகி பிழை பொறுக்க வேண்டும் தவ்பா பிரார்த்தனை பைத்

قَالَهُ: صَحَابِيُ الْجَلِيْلْ صَاحِبِ الْغَارِ سَيِّدِنَا اَبُوْ بَكْرِنِ الصِّدِّيْقُ رَضِيَ الله عَنْهُ

அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமந்த திருத்தோழர் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வேண்டிய முனாஜாத்

 

Translation:

Moulavi T.S.A. Seyed Abu Thahir Bakri Faheemi

Descendent of Seyyiduna Abu Bakr Siddeeq (raliallaahu anhu)

 

 

جُدْ بِلُطْفِكَ يَااِلٰهِيْ

مَنْ لَّهُ زَادٌ قَلِيْلٌ

مُفْلِسٌ بِالصِّدْقِ يَأْتِيْ

عِنْدَ بَابِكَ يَاجَلِيْلٌ

 

யா அல்லாஹ்! நல் அமல் சேமிப்பதில் குறைவானவனை உன் அன்பால் அணைத்துக் கொள்வாயாக.

அவனோ மெய்யாக எதுவுமின்றி உன் திரு வாசலில் நின்றுள்ளான்.

 

اِنَّ لِيْ ذَنْبًا عَظِيْمًا

فَاغْفِرِالذَّنْبَ الْعَظِيْمَ

اِنَّنِيْ شَخْصٌ غَرِيْبٌ

مُذْنِبٌ عَبْدٌ ذَلِيْلٌ

 

யா அல்லாஹ்! நிச்சயமாக என் பாவங்களோ மிகப் பெரியவை

அந்தப் பெரும் பாவங்களை மன்னித்து விடு நாயனே!

நிச்சயமாக நானோ ஏழையாகவும் இழிவான பாவி அடியானுமாய் இருக்கிறேன்..

 

مِنْهُ عِصْيَانٌ وَّنِسْيَانٌ

وَّسَهْوٌ بَعْدَ مَا

مِنْكَ اِحْسَانٌ وَّفَضْلٌ

بَعْدَ اِعْطَاءِ الْجَزِيْلِ

 

யா அல்லாஹ்! அவனிலிருந்து பாவங்களும் மறதியும் மறதிக்குப் பின் மறதியும் ஏற்படுகின்றன.

உன்னிடமிருந்தோ உபகாரமும் அருட் சிறப்பும் அடுத்தடுத்து அருட்கொடைகளும்

உண்டாகிக் கொண்டே இருக்கின்றன.

 

قَالَ يَارَبِّيْ ذُنُوْبِيْ

مِثْلَ رَمْلٍ لاَتُعَدُّ

فَاعْفُ عَنِّيْ كُلَّ ذَنْبٍ

فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ

 

யா அல்லாஹ்! என் பாவங்களோ எண்ணிலடங்காது மண்ணிலும் அதிகமாய் இருக்கின்றன.

உன் அழகிய மன்னிப்பால் மனமிறங்கி மன்னித்திடு மன்னானே!

 

عَافِنِيْ مِنْ كُلِّ دَآء

وَاقْضِ عَنِّيْ حَاجَتِيْ

اِنَّ لِـيْ قَلْبًا سَقِيْمًا

اَنْتَ مَنْ يَشْفِى الْعَلِيْلْ

 

யா அல்லாஹ்! என் எல்லா நோய்களை விட்டும் என்னை சுகமாக்குவாயாக.

நீதனே! என் தேவைகளை நீயே நிறைவேற்றுவாயாக...

நிச்சயமாக என் இதயமோ ரணப் பட்டுப் போய் இருக்கிறது.

நீயோ சுகப் படுத்துபவனாக இருக்கிறாய்...

 

كَيْفَ حَالِيْ يَااِلٰهِيْ

لَيْسَ لِيْ خَيْرُ الْعَمَلِ

سُوْءُ اَعْمَالِيْ كَثِيْرٌ

زَادُ طَاعَتِيْ قَلِيْلٌ

 

யா அல்லாஹ்! என் நிலை என்னவோ யானறியேன்

யா ரப்பே! என்னிடம் எந்த நல் அமலும் இல்லையே ஆண்டவா!

தீய செயல்களால் மிகைத்தவன். கீழ்படிதலிலும் குறைந்தவன்...

 

قُلْ لِّنَارٍ اُبْرُدِيْ يَا

رَبِّ فِيْ حَقِّيْ كَمَا

قُلْتَهَا يَانَارُ كُوْنِيْ

اَنْتَ فِيْ حَقِّ الْخَلِيْلِ

 

யா அல்லாஹ்! உன் நேசர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக

நெருப்பைக் குளிர்ந்திடக் கூறியவனே!

நாளை மறுமையில் நரக நெருப்பையும் எனக்காகக் குளிரச் செய்வாயாக!

 

اَنْتَ شَافِيْ اَنْتَ كَافِيْ

فِيْ مُهِمَّاتِ الْاُمُوْرِ

اَنْتَ رَبِّيْ اَنْتَ حَسْبِيْ

اَنْتَ لِيْ نِعْمَ الْوَكِيْلُ

 

யா அல்லாஹ்! நீயே சுகமளிப்பவன். என் அவசிய காரியங்கள் அனைத்திற்கும் நீயே போதுமானவன்.

நீயே என் பரிபாலனாகவும் போதுமானவனாகவும் அழகிய பொறுப்பாளனாகவும் இருக்கிறாய்.

 

رَبِّ هَبْ لِيْ كَنْزَ فَضْلِكَ

اَنْتَ وَهَّابٌ كَرِيْمٌ

اَعْطِنِيْ مَافِيْ ضَمِيْرِيْ

دُلَّنِيْ خَيْرَ الدَّلِيْلِ

 

யா அல்லாஹ்! பெருங் கொடையாளனே! உன் கருவூலத்தில் இருந்து எனக்கு

வெகுமதிகளை வழங்கிடுவாயாக.

என் மனதில் மறைந்திருக்கும் தேவையை நிறைவேற்றுவாயாக.

நல் வழி மீதில் என்னைச் செலுத்துவாயாக...

 

هَبْ لَنَا مُلْكًا عَظِيْمًا

نَجِّنَا مِمَّا نَخَافُ

رَبَّنَا اِذْ اَنْتَ قَاضِيْ

وَالْمُنَادِيْ جَبْرَئِيْلُ

 

யா அல்லாஹ்! நல்லரசான வல்லரசை எங்களுக்கு வழங்கிடுவாயாக.

ஏகனே! எதை நாங்கள் அச்சப்படுகிறோமோ..

அந்த அபாயங்களில் இருந்து எங்களுக்கு அபயம் தருவாயாக ..

நீயோ தீர்ப்பளிப்பளிப்பவனாக இருக்கிறாய். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைப்பவர்களாக இருக்கிறார்கள்...

 

رَبِّيَ اجْعَلْ لِّيْ نَصِيْرًا

كَالـنَّــصِـيْـرِاسْـمًـالَنَا

كَالنَّصِيْرِ فـِي الْقِيَامَةِ

اَنْتَ لـِيْ نِعْمَ الْوَكِيْلُ

 

யா அல்லாஹ்! உதவியாளனே! உன் பெயருக்கேற்பவே நாளை கியாமத்தில்

நீயே எனக்கு உதவியாளனாகுவாயாக. நீயே அழகிய பொறுப்பாளனாகுவாயாக.

 

اَيْنَ مُوْسَىٰ اَيْنَ عِيْسَىٰ

اَيْنَ يَحْيَى اَيْنَ نُوْحٌ

اَنْتَ يَاصِدِّيْقُ عَاصِيْ

تُبْ اِلَى الْمَوْلَى الْجَلِيْلِ

 

நபிமார்களான மூஸா அலைஹிஸ்ஸலாம்

ஈஸா அலைஹிஸ்ஸலாம் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் நூஹ் அலைஹிஸ்ஸலாம்

இவர்களெல்லாம் எங்கும் போய் விடவில்லை.

 

ஸித்தீகே! அவர்களின் நாயனான கண்ணிய எஜமானிடம்

நீயும் தவ்பா செய்வாயாக. பிழை பொறுக்கக் கேட்பாயாக.

 

ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

 

لَا اِلٰهَ اِلَّا للهُ لَا اِلٰهَ اِلَّا اللهُ

لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ