யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்
கவி: அப்துர் ரஹீம் காதிரி
உங்கள் அருள்பாதம் விடா நிலையருள்வீர்
யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்
உமக்கர்ப்பணமே உடல் உயிர் அனைத்தும்
யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்
மேரே خக்வாஜாஹ் பியா (4)
அஜ்மீரில் எனை சேர்த்திடு இறைவா
நான் பூக்களால் போர்வை போர்த்திடனும்
அர்ப்பணம் செய்வேன் என் உடல் உயிரை
யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்
இறைவனின் நேசர் நபி தந்த ஔியாம்
ஏழை பங்காளர் எனும் புகழுடையோர்
உங்கள் ரவ்ழா அதில் திரு காட்சி அருள்வீர்
யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்
ஒலிகளின் ஒலியே எங்கள் யா خக்வாஜாஹ்
கொடை வள்ளலின் மகவே யா خக்வாஜாஹ்
நீங்கள் நபியின் வழி அவ்லாதே அலி
யா خக்வாஜாஹ் முயினுத்தீனு ஹஸன்
நான் தொலைவினில் இருந்தும் கவலையில்லை
உங்கள் கருணையோ எமக்கு மிக அருகில்
உங்கள் தரிசனமே எங்கள் முர்ஷிதிலே
யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்
செய்ஹு உதுமான் வலி செய்யித் மஸ்ஊது வலி
எனும் காரண பெயரினில் அரசாட்சி
இந்த உயர் வழியில் எம்மை நிலைக்கச் செய்வீர்
யா خக்வாஜாஹ் முயீனுத்தீனு ஹஸன்