அல்லாஹ் யா அல்லாஹ் - நீ இல்லா இடமேது
கவி: கவிஞர் முஷ்தாக் அஹ்மத்
அல்லாஹ் யா அல்லாஹ் - நீ
இல்லா இடமேது
சொல்லாலுனை போற்றிடுவேன் அல்லாஹ்
துளியைத்தான் அணுவாக
அணுவைத்தான் உயிராக
கருவுக்குள் பதமாக
பல மாதங்கள் காத்தாயே
அற்புதமே என் அத்தாட்சியே
லில்லாஹ் - அல்லாஹ் யா அல்லாஹ்
மக்கள் வழி மாண்புற
தூதர் வழிகாட்டுவார்
தூதர் வழி செல்லவே
சொர்க்கம் தன்னை சாட்டுவார்
சுவனத்தோட்ட கதவுகளை
திறக்கும் அவர் போதனை
செவியேற்கா மூடருக்கு
மறுமை பெரும் வேதனை
மார்க்கம் கொண்டு வாழ்ந்தால்
மனதில் ஒளி வீசும்
ஒளி படர்ந்த வாழ்வால்
இறையொளி சேரும்
அற்புதமே! பேரானந்தமே! லில்.....லாஹ்
மறுமையின் பட்டோலை
வலக்கையில் கிடைக்கணும்
வாழ்க்கை அதன் மூச்சுக்கள்
கலிமாவில் அடங்கணும்
மண்ணறையின் கேள்விகள்
சுவன வாயில் சாவிகள்
ஸிராத்துல் முஸ்தக்கீம்
பூத்தூவிய பாதைகள்
வாழ்க்கையிந்த வாழ்க்கை
வரமாகக் கண்டால்
நபிவழிச் சென்று
தவமெனக் கொண்டால்
அற்புதமே! பேரானந்தமே! லில்.....லாஹ்