மழலை வாழ்த்துப் பா
கவி: எம். ஸலீமாபானு பிலாலிய்யா
அகிலம் படைத்தோன் அருளிய கொடையே
அண்ணல் நபிகளின் அன்புரு கனியே
உன்னை தந்திட்ட இறையை புகழ்வோம்
உள்ளங்கள் நிறைந்த மகிழ்வை பெறுவோம்
பூவே ஒளி நிலாவே உன்னை வாழ்த்தவா
இப்பாடல் வரிகளில் வாசனை மலர்களை தூவவா
யா நபியே யா நஸீபே
பிள்ளைக்கனியை தந்திட்ட நூரே
யா நபியே யா நஸீபே
சொல்வோம் ஸலவாத் உங்களின் மீதே
1) கண்ணான நபியின் ஒளியில் துளிர்த்திட்ட மகவே
முஹ்யித்தீன் நாதர் துவாவில் மிளிர்ந்திட்ட பூவே
அஜ்மீர் காஜா நாயகம் முராதில் ஜொலித்திட்ட நல் முத்தே
ஷாகுல் ஹமீது எஜமானின் பொருட்டால் கிடைத்திட்ட எம் சொத்தே
2) சொந்தகள் கூடியே உன்னை சூழ்ந்திடுவோமே
சோபனங்கள் கூறியே உன்னை வாழ்தித்திடுவோமே
ஏக இறையின் பரிசாய் வந்திட்ட எங்கள் குலக் கொழுந்தே
நீண்ட ஆயுள் நிறைமய வாழ்வுடன் வையகம் வாழ்வாயே
3) ஆலிம் ஆபித் ஹாபிழாய் தீன் பணி செய்வாய்
ஆஷிகுர் ரஸூலாக மேன்மை அடைவாய்
காத்தம் நபியின் காட்சியைக் கண்டு கல்பினில் நிறைப்பாயே
கண்ணின் மணியே எங்கள் உறவே உயர் நிலையடைவாயே
4) நபிமார்கள் நேசம் கொண்டு வாசம் பெறுவாய்
பெற்றோர்கள் பாசம் பெற்று பேரன்பு கொள்வாய்
உற்றார் உறவினர் உவப்புடன் அழைக்கும் அழகுயர் பெயர் உடையோன்
தாவூத் இப்ராகிம் கண்ணே
செய்யிது முஹம்மது சாஹிபே
இரு கல்வியிலும் எழுச்சிகள் பெற்று வளர்ச்சிகள் காண்பாயே
5) சூழ்ச்சிகள் சூழா வண்ணம் இறை நீ காப்பாய்
வாழ்வாங்கு வாழச் செய்து வளங்கள் சொரிவாய்
நோய்பிணியணுகா தேக சுகத்துடன் வாழ்ந்திடச் செய்வாயே
நீண்ட ஆயுள் நிறைவை தந்து உன் நேசத்துள் இணைப்பாயே
குறிப்பு: அழகுயர் பெயர் உடையோன் என்பதிற்கு பகரமாக குழந்தையின் பெயரை சேர்த்து பாடவும்