பாலையில் பாலையில் அன்று


LYRICS


பாலையில் பாலையில் அன்று

கவி: கவிஞர் நைனா முஹம்மது

பாலையில் பாலையில் அன்று
பால் நிலா பால் நிலா ஒன்று
உதித்தது உதித்தது தானம்மா
அந்த ஜோதியில் ஜோதியில் அன்று
நீதியும் நேர்மையும் நின்று
நிலைத்தது நிலைத்தது தானம்மா
மனிதம் மலரைப் போல் மணந்தது
புனிதம் பூவைப் போல் பூத்தது
எங்கள் வள்ளல் வருகையால்
பல உள்ளம் மலர்ந்தது

விதவைகள் இருளுக்கெல்லாம் விடிகதிரோனே
வியர்வை தரும் மேனிக்கெல்லாம் வீசிடுங்காற்றே
பொறுமை எனும் இலக்கணத்தின் பொக்கிஷமே
மறுமை அதன் மாளிகையில் அகல் விளக்கே
சுவைதரும் சுவைதரும் கனிகளைப் போல்
புவிதனில் புவிதனில் வந்த அமுதே
குளிர் தரும் குளிர் தரும் நிலவினைப்போல்
அறம்செய்ய அறம்செய்ய வந்த ஒளியே
சுகந்தரும் உங்கள் மொழி
இதந்தரும் உங்கள் வழி... அண்ணலே
வானம் வாழ்த்துகின்ற வசந்தமே - இந்த
ஞாலம் போற்றுகின்ற  சுகந்தமே

கவிதை தரும் நெஞ்சுக்கெல்லாம் காவிய ஊற்றே
கருணை கொண்ட இறைவன் தந்த அருளின்பாட்டே
பொய்மையினை பொசுக்க வந்த சூரியரவரே
வாய்மைதனை பொழிந்திட வந்த மழை  மேகமே
பனிவிழும் பனிவிழும் மலர்களைப் போல்
அணிசெய்ய அணிசெய்ய வந்த அழகே
மழை தரும் மழை தரும் முகிலினைப் போல்
வரம்தர  வரம்தர  வந்த வனப்பே
சுகம் தரும் உங்கள் மொழி
அகம்  செல்லும் உங்கள்  வழி… அண்ணலே
வானம் வாழ்த்துகின்ற வசந்தமே - இந்த
ஞாலம் போற்றுகின்ற சுகந்தமே