மர்ஹபன் அஹ்லன் வஸஹ்லன் யா ரமழான்


LYRICS


மர்ஹபன் அஹ்லன் வஸஹ்லன் யா ரமழான்

கவி: அல்ஹாஜ் கம்பல்பக்ஷ் பாக்கர் ஸாஹிபு ஃபஹீமீ

மர்ஹபன் அஹ்லன் வஸஹ்லன்
மர்ஹபன் யா ரமழான்
ரமழான் யா ரமழான்
யா ஸெய்யிதஷ் ஷுஹூர்

அல்லாஹும்ம ஸல்லிம்னீ
ஸல்லிம்னீ லி ரமழான்
ஸல்லிம்னீ ஸல்லிம்னீ
வஸல்லிம் அலா ரமழான்

இரஜபொடு ஷஃபான் திங்களிரண்டில்
இறையின் பொலிவு ஓங்கிடனும்
பொங்கு மகிமை மாதம் ரமழான்
எங்களிடையே வர வேண்டும்

ரய்யான் என்னும் சுவன வாயில்
மெய்யாய் நாமும் ஏகிடவே
பங்கம் போக்கும் சங்கையோங்கும்
திங்கள் ரமழான் வருகவே

அருளொரு இறையின் மஃபிரத்தென்னும்
பெருநிதி எங்கும் பெருகிடவும்
பெருந்தழல் நரகத்தளை தனையறுத்து
அருஞ்சுக சுவனம் தந்திடனும்

கேடுகள் தடுக்கும் கேடயமான
ஸவ்மெனும் விரதம் பூண்டிடனும்
இறைமொழி நபி வழி தன்னைப் பேணி
அறங்கள் பலவும் விளைத்திடனும்

லைலத்துல் கத்ரெனுமுயரிரவின்
அலகில் நன்மை பெற்றேக  
அகிலங்களனைத்தின் அரசாம்
அல்லாஹ் இரங்கியெம் மீது அருளிடனும்

மணங்கமழ் மனங்கவர் மா நபி நாதர்
மன்னவர் முஹம்மதர் முக மலர்க்காய்
வான் மழை சொரியும் அன்னவர் மீது
அஸ்ஸலாதுது வஸ்ஸலாம்

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலைக யா ரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலைக யா ஹபீபல்லாஹ்