ஜோதி நபியே அருள் இலங்கும் திரு நபி


LYRICS


ஜோதி நபியே அருள் இலங்கும் திரு நபி
ஜகம் எங்கும் ஒளிர்ந்திட்ட மா நபி
ஜனித்தீரே மன்னோனின் நேசர்
நிலைத்தீரே எம் மாந்தரின் மனதினிலே

தன்னிகரில்லா தாஹவே நீரே
பொன்னிகரில்லா பூமானும் நீரே
நன் நபியே மறைவில்லா கோமானும் நீரே
நன் நபியே குறைவில்லா சீமானும் நீரே
நன் நபியே நிகரில்லா எம்மானும் நீரே
எம் உள்ளத்தில் மலர்ந்திட்ட மல்லி
எம் இல்லத்தில் மலர்ந்திடும் அல்லி

மங்கா ஒளி வீசும் மன்னரின் மேனி
நம்மின் நெஞ்சில் என்றுமே பேணி
ஏகிடுவீர் ஏந்தலின் முகத்தினை நாடி
ஏகிடுவீர் வேந்தரின் முத்திரை தேடி
போற்றிடுவீர் அண்ணலின் புகழினைப் பாடி
நும் பூவிதழ் திறந்தெம்மை அழைப்பீர்
பொற்கரம் நீட்டியே எம்மை அணைப்பீரே

எமின் உள்ளத்தில் பொங்கிடும் உவகை
காதல் வெள்ளத்தில் மூழ்கிடும் வகையே
கண்ணோளிவே நான் ரசித்திடனும் கண்ணழகை
உள்ளொளிவே நான் கண்டிடணும் உள்ளழகை
பொன்னோளிவே நான் பார்த்திடனும் முத்தழகை
புகழ் பாடும் எம் முன்னே தோன்றி
கதம் முத்திட எமக்கும் அருள்வீரே