கவி: கவிமகன் காதர்
அல்லல் தீராதோ எமைப்
படைத்த நாயன் அருளாலே
இன்னல் மாறாதோ அவன்
பொழியும் கருணை மழையாலே
எண்ணிலா துன்பங்களே
சூழ்ந்த போதும் யா அல்லாஹ்
ஏந்தினோம் கரங்களையே
காவல் செய்வாய் யா அல்லாஹ்
1) மண்ணிலேப் பிறந்து விட்டோம்
எண்ணிறைந்த குறையோடு
கண்ணிலே வழிந்து வரும்
காவிரி போல் நீரோடு
எங்களை தாங்கிடவே
தாயாக வந்த தாரம்மா
மங்கியே மாராமல் எமைத்
துளிர்க்க வைக்கும் வேரம்மா
இயலாக் குழந்தை பல
கல்வி கற்கும் மாடமம்மா
முயலாய் துள்ளி வரும் பள்ளி
துளிர் கூடமம்மா
வானமெல்லாம்… ஆ…
வானமெல்லாம் ஒ பறவைகள்
போல் வலம் வரவே
விரிக்கும் சிறகெமக்கு
எங்கள் துளிர் கூடமம்மா
2) ஓரிறைத் தந்த மறை
தாங்கி வந்த ரமழானாம்
பாரிய பாவக் கறை
நீக்கி விடும் மருந்தாகும்
புண்ணியம் சூழும் இந்த
மாதமதில் உதவிடுவீர்
நன்மைகள் நாடி எமை
ஆதரித்தே அணைத்திடுவீர்
காரிருள் நீக்கும் கதிராக
வந்த பெருமானார்
பேரருள் நிலைக்கும்
இனிதன்புடனே ஈந்திடுவீர்
காலமெல்லாம் ஆ...
காலமெல்லாம் உயர்ந்தே
எம் கரமே உமக்காக
காக்குமோர் இறையிடமே
கண்ணீர் மல்க வேண்டிடுவோம்