படி மீது வந்த முடிவான நபி
கவி: கவிஞர் காயல் ஏ ஆர் தாஹா
***************
ஸலவாத்தைச் சொல்வோம் என்றும்
சங்கை நபி மேல் எங்கும்
இருள் நீங்கி நெஞ்சம் ஔிரும்
இடர் நீங்கி இன்பம் சூழும்
***************
ஸலவாத்தைச் சொல்வோம் என்றும்
சங்கை நபி மேல் எங்கும்
அருளாளன் இறையின் தூதர்
அண்ணல் நபிகள் மீது
1) உலகோர்க்கு அருளாய் வந்த
உயர்வான நெறியைத் தந்த
சகலோர்க்கும் உரிமையீந்த
சன்மார்க்கம் தீனைத் தந்த
படி மீது இருளை ஓட்ட
முடிவான நபியாய் வந்த
முத்தான நபிகள் மீது
நித்தம் சொல்வோமே ஸலவாத்
இருள் நீங்கி நெஞ்சம் ஔிரும்
இடர் நீங்கி இன்பம் சூழும்
(ஸலவாத்தை)
2) தாய் தந்தை அன்பை விடவும்
தனி அன்பு கொண்டு நபி மேல்
ஊண் உடலும் உயிரை விடவும்
உரித்தான ஏந்தல் நபி மேல்
தணியாத தாகம் கொண்டு
தாஹா ரசூல் மேல் நன்று
அடங்காத ஆவலோங்க
அழகாய் சொல்வோமே ஸலவாத்
கஸ்தூரி வாச நபிமேல்
இஷ்கோடு எந்த நாளும்
(ஸலவாத்தை)
3) திண்டாடும் மறுமை நாளில்
மன்றாடி ஏகன் முன்னே
குன்றாத அன்பினோடு
பொன்றாத சுவனை நமக்கு
பரிவோடு பாசம் பொங்க
பரிந்தோதும் நேச நபிமேல்
பாங்கான இனிய ஸலவாத்
பணிவாய் சொல்வோமே நாமே
அல்லாஹ்வும் அவனின் அமரர்
அண்ணல் நபிமேல் சொன்ன
(ஸலவாத்தை)