இணையில்லாத இறைவா எனக்கு கருணை புரிவாயே


LYRICS


இணையில்லாத இறைவா எனக்கு கருணை புரிவாயே
இம்மை வாழ்வில் இறைவா எனக்கு அருளை பொழிவாயே
இறைவா அருளை பொழிவாயே
மருளும் நரகை இறைவா எனக்கு மருள வைப்பாயே
மறுமை வாழ்வில் இறைவா எனக்கு உன்னைத் தருவாயே
இறைவா உன்னைத் தருவாயே

பிறந்த உயிர்கள் சுவைக்கும் மனிதா இறப்பைப் படைத்தானே
இறந்த உடல்கள் நடக்கும் மனிதா மறுமை திடல் தானே
சுமந்த தாயின் சுமைகள் மனிதா இறங்கும் நாள் தானே
நிறைந்த அமல்கள் சுமப்பாய் மனிதா மஹ்ஷர் வெளிதானே
மனிதா மஹ்ஷர் வெளிதானே

நபியின் வழியில் நடந்தால் மனமே வாழ்வு சிறந்திடுமே
நபியின் ஸலவாத்ததனில் மனமே வளங்கள் பெருகிடுமே
நபியை காண்பதற்கே மனமே கண்கள் ஏங்கிடுமே
நபியை கண்ட உடனே மனமே கல்பும் குளிர்ந்திடுமே
மனமே கல்பும் குளிர்ந்திடுமே

உயிரை எடுக்கும் மலக்கே வருவீர் அழைக்க ஒருநாளே
உதட்டில் ஒலிக்கும் மலக்கே கலிமா இறைவன் அருளாளே
உவந்து வருவேன் மலக்கே இறையை காண அந்நாளே
உவகை கொள்வேன் மலக்கே அந்நாள் எந்தன் மணநாளே
மலக்கே எந்தன் மணநாளே

இறுதித்தூதர் நபியே எனக்கு கருணை புரிவீரே
இறையின் முன்பு நபியே எனக்கு பரிந்து உரைப்பீரே
பானம் அருந்த நபியே எனக்கு அள்ளித் தருவீரே
பாலம் கடக்க நபியே எனக்கு உதவி செய்வீரே
நபியே உதவி செய்வீரே

கவி: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் அவர்கள் (துபாய்)