மாணல் புகாரி இமாம்


LYRICS


அல்-இமாம் முஹம்மதிப்னு இஸ்மாஈல் புஹாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மீது புகழ்ப் பாடல்

வான்புவி யேற்றிடு நபி மஹுமூதரின்
வாய்மொழித் தேனமுதை
மாண்புறவே நமக் களித்தவராந் தவ
மாணல் புகாரி இமாம்
நண்புடனே நாதரவர்
நன்னாமமே வாழ்த்துவோம்

தண்மலர்க் காவளர் திருவின் புகாரா
தனிலறவோ ரிஸுமாயில்
கண்மணியாகத் தோன்றியிங்கே
காரகற்றிய கதிரே

மண்ணுல கார்ந்திடும் பதிபல ஏகியே
மதியெனும் மாநீதி தேடி
புண்ணிய மார்க்கச் சேவையிலே
பாங்கொடு திகழ்ந்தவரே

இனித்திடு மாநபி மொழியினைத் தேர்ந்திட
இடர் பலவே யடைந்தாரே
விழித்திருந் தேகன் விருப்புறவே
வணக்கத்தில் திளைத்தவரே

சொல்லிட நாவினிற் சுவையினை யூட்டிடுஞ்
சுகந்த முஹம்மது என்றே
நல்லுயர் நாமம் சூடியிங்கே
நாதரென்று யர்ந்தவரே

கவி: மர்ஹூம் கவிஞர் SMB மஹ்மூது ஹுசைன்