உலகம் பிறந்தது யாராலே


LYRICS


உலகம் பிறந்தது யாராலே – நம்
உண்மை முஹம்மது நபியாலே (2)
இதயம் மகிழ்வது யாராலே – நம் (2)
இறுதித் தூதர் நபியாலே  (உலகம்)
 
(1) சொர்க்கம் செல்வது யாராலே – நம்
சுந்தர நபிகளின் பொருட்டாலே
ஹக்கனை அடைவது யாராலே – நம்
ஹாத்தமுன் நபிகளின் பொருட்டாலே
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி - தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
 
(2) மடமை மறைந்தது எதனாலே – நம்
மஹ்மூதர் நபி வரவாலே
மனிதனாய் வாழ்வது யாராலே – நம்
மன்னர் முஹம்மது நபியாலே
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி - தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி
 
(3) பெண்மை வாழ்வது யாராலே – எங்கள்
பெருமான் முஹம்மது நபியாலே
விதவை மறுமணம் யாராலே – எங்கள்
வேந்தர் முஹம்மது நபியாலே
சேர்ந்து அமர்ந்து கொண்டாடி - தினம்
மகிழ்வோம் நபிகளின் புகழ்பாடி

கவி ஆக்கம்: காயல்பட்டணம் முத்து தைக்கா அல்ஹாஜ் T.M.K. சுல்தான் அப்துல் காதிர் பக்ரி அவர்களின் மகன் முத்து தைக்கா அல்ஹாஜ் T.S.A. யஹ்யா முஹ்யித்தீன் பக்ரி அவர்கள் (துபாய்)