பன்னி ரண்டு நாளிதே
பதிபி றந்த நாளிதே
மன்னு யிர்க ளுக்கெலாம்
மதிபி றந்த நாளிதே
Ye Rasoole Khuda Marhaba Marhaba
Ae Mere Dilruba Marhaba Marhaba
Ae Sirajun Muneer Marhaba Marhaba
Rahmate Kibriya Marhaba Marhaba
Sarkar Ki Aamad Marhaba
Dildar Ki Aamad Marhaba
Zara Ooncha Bolo Marhaba
Saare Jhoom Ke Bolo Marhaba
=========
அண்ண லாரே சூரியர்
விண்ண கத்தின் முழுமதி
கண்கு ளிர்ந்த சோதியே
எண்ணி றந்த ஒளிமயம்
கற்றி லாக்க லைக்கடல்
காட்டி வைத்த புதுமையில்
வெற்றி வேத மல்குரான்
மேன்மை மிக்க தாகுமே
அண்ண லார்ம றைவினோ
டற்பு தங்கண் மறைந்தன
வண்ண மிக்கத் திருக்குரான்
மறைந்தி டாத வற்புதம்
=========
ஒருவ னேக னிணையிலை
உண்மைத் தூதர் யானென
அருமை யண்ணல் வீரமாய்
அன்று ரைத்த புதுமையே
நானு மனித னென்றனர்
நாயன் றூதி றங்கிடும்
தீன வர்க்கு நபியு(ம்) நான்
திண்ண மிஃதென் றோதினர்
உண்மை செப்ப வஞ்சிலர்
ஒருவ னென்ன வுறுதியாய்
வண்மை நாதர் கூறினர்
வலிமி கைத்து நின்றனர்
=========
யுத்த வீரர் தளபதி
யுகத்தி னொப்பிற் பெருபதி
எத்தி சையு மதிரதி
ஈடி லாத வார்மதி
இடவ லக்க ரங்களில்
இரவி யோடு திங்களைக்
கொடிய வர்கள் கொடுப்பினும்
கொண்ட வுண்மை மாற்றிடேன்
என்று வீர தீரமாய்
இயம்பி நின்ற வீரரே
என்று(ம்) மூவு கத்தினை
இசைய வோச்சு மண்ணலார்
=========
வீர முள்ள வேங்கையும்
தீர மிக்கச் சீயமும்
வீர வீரர் நபிகளின்
மேன்மை வீறுக் கஞ்சுமே
பாடித் தங்கள் பங்கயப்
பதம்ப ணிந்த பேரராம்
நாடும் கலீ லவுனுக்கு
நாளும் நலம் நல்குவீர்
தூயோன் விண்ண வர்ஸலாத்
தும்ஸ லாமும் கூறினர்
தூய நம்பிக் கையுளீர்
சொல்க ஸலாத் தும்ஸலாம்