பன்னி ரண்டு நாளிதே
பதிபி றந்த நாளிதே
மன்னு யிர்க ளுக்கெலாம்
மதிபி றந்த நாளிதே
========
எங்கள் தூய நாதரே
உங்க ளன்பிற் றிளைத்திட
இங்கு மங்குங் காத்துமே
எம்மை மன்னித் தருளுவீர்
எம்பி ழைபொ றுத்தெமை
இன்ப மாக வாழவே
இம்மை மறுமைப் பேறுறச்
செய்த ருள்வீர் நாதரே
========
தூய வாழ்வும் வளமதும்
காய ஆத்ம சுகமதும்
நேய மிறையின் பெற்றுநாம்
நிதமும் வாழ அருளுவீர்
நம்ம னைவி மக்கட்கும்
நலிந்த தந்தை தாய்க்குமே
எம்மு டன்பி றந்தவர்க்
கென்றுங் காப்பு நல்குவீர்
========
சுற்றத் தார்க்கு மன்பினைச்
சுமந்த தூய வர்களுக்
குற்ற தீட்ச தர்தமக்
குங்கள் கருனண வேண்டுமே
மக்கள் துயர் நீக்கியே
மறுமலர்ச்சி யூட்டியே
தக்க மதீ நாநகர்
தாம்ம றைந்த நாளிதே
========
பாடித் தங்கள் பங்கயப்
பதம்ப ணிந்த பேரராம்
நாடும் கலீ லவுனுக்கு
நாளும் நலம் நல்குவீர்
தூயோன் விண்ண வர்ஸலாத்
தும்ஸ லாமும் கூறினர்
தூய நம்பிக் கையுளீர்
சொல்க ஸலாத் தும்ஸலாம்