பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்


LYRICS


வானில் நீந்தி வரும்
மீன்கள் பூச்சொரிய
காணும் புதுமை என்னவோ
எங்கள் பிள்ளைச் செல்லம்
வந்த நாளே...

நாதம் தவழ்ந்திடவே
நாங்கள் மகிழ்ந்திடவே
கண்கள் பனிப்பதென்னவோ
திங்கள் இல்லம் இறங்கி
வந்ததாலோ...

வாசம் வீசும்
மண வாழ்வின்
பரிசாக...
வாசல் வந்த கிளியே
ஓ...

வார்த்தை கோர்த்து
எழில்...
மாலைச் சூடி உனை
கூடி வாழ்த்துகிறோம்
நல் வாழ்வு வாழ்க...

===================
இரண்டு கல்வியிலும்
சிறந்து ஓங்கி
நிறைந்த ஞானம் பெறுவாய்
(அன்பே அருளே கனியே அமுதே)

இறை நேசர் வழி
பேணி வாழ்வில்
உயர்வை கண்டு மகிழ்வாய்

மறை போற்றிடும் தூதரை
திரை நீங்கியே காணுவாய்
சுக தேகமும் செல்வமும்
பெற நாளுமே வாழ்த்துவோம்


===================
குயில் தோற்கும் உந்தன்
மொழியைக் கேட்டு
மழையும் கீதம் பாடும்

தளிர் பாதம் தத்திப்
பழகும் வேளை
தென்றல் தாளம் போடும்

இரு விழிகளோ ஓவியம்
அது பேசிடும் காவியம்
முத்து சிந்திடும் பூ முகம்
பசி தாகமும் தீர்ந்திடும்

===================
மலர் மேனி மடி
ஏந்தும் நேரம்
மனதில் நன்றி பகர்வோம்
(புகழும் துதியும் உனக்கே  அல்லாஹ்)

மழலைத் தேடும் அன்பர்
வாட்டம் போக்க
கைகள் ஏந்தி கேட்போம்

கன்னத்தில் இதழ் சேரவே
பனி போல் உடல் சிலிர்த்திடும்
சில நாழிகை பிரியவே
உளம் ஏங்கியே தேடுமே

குறிப்பு: “எங்கள் பிள்ளைச் செல்லம்” என்பதை மாற்றி குழந்தையின் பெயரை இணைத்துப் பாடலாம்

பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்
Birthday Greeting Song


வானில் நீந்தி வரும்
மீன்கள் பூச்சொரிய
காணும் புதுமை என்னவோ
What's this wonder of witnessing the stars in the sky scattering flowers around

எங்கள் பிள்ளைச் செல்லம்
வந்த நாளே...
It's the day our beloved child arrived on this earth

நாதம் தவழ்ந்திடவே
நாங்கள் மகிழ்ந்திடவே
கண்கள் பனிப்பதென்னவோ
What's that the eyes commanding the lips to sing a tune and make us cheer

திங்கள் இல்லம் இறங்கி
வந்ததாலோ...
Is it because of the moon descending into our home...

வாசம் வீசும்
மண வாழ்வின்
பரிசாக...
வாசல் வந்த கிளியே
ஓ...
You are the parrot (beloved) who arrived at our doorstep as a gift for a happy married life

வார்த்தை கோர்த்து
எழில்...
மாலைச் சூடி உனை
கூடி வாழ்த்துகிறோம்
நல் வாழ்வு வாழ்க...
We greet you with a beautiful garland weaved by words, may you live a peaceful life

===================
இரண்டு கல்வியிலும்
சிறந்து ஓங்கி
நிறைந்த ஞானம் பெறுவாய்
(அன்பே அருளே கனியே அமுதே)
May you obtain knowledge and wisdom by succeeding in both the educations (worldly and spiritual)
----Dear, blessed, sweet----

இறை நேசர் வழி
பேணி வாழ்வில்
உயர்வை கண்டு மகிழ்வாய்
May you follow the footsteps of the friends of God and progress high in your life

மறை போற்றிடும் தூதரை
திரை நீங்கியே காணுவாய்
May you be blessed with the divine favour of seeing the Beloved Prophet (Sallallahu Alaihi Wasallam) in reality

சுக தேகமும் செல்வமும்
பெற நாளுமே வாழ்த்துவோம்
We wish you always to have sound health and wealth

===================
குயில் தோற்கும் உந்தன்
மொழியைக் கேட்டு
மழையும் கீதம் பாடும்
Even the rain sings a tune by listening to your cute voice which overwhelms even that of the koel 

தளிர் பாதம் தத்திப்
பழகும் வேளை
தென்றல் தாளம் போடும்
The breeze is rhythmic towards your tenderfoot crawl

இரு விழிகளோ ஓவியம்
அது பேசிடும் காவியம்
Your eyeballs are artistic
They compose epic poetry

முத்து சிந்திடும் பூ முகம்
பசி தாகமும் தீர்ந்திடும்
Your pearl-pouring flowery face (when looked at)
makes the hunger and thirst disappear

===================
மலர் மேனி மடி
ஏந்தும் நேரம்
மனதில் நன்றி பகர்வோம்
(புகழும் துதியும் உனக்கே அல்லாஹ்)
As we hold you on our lap, we thank Allah for His blessings
(All praise belongs to you Allah!)

மழலைத் தேடும் அன்பர்
வாட்டம் போக்க
கைகள் ஏந்தி கேட்போம்
We pray to the Almighty Allah to bless those with offspring who are yearning for that

கன்னத்தில் இதழ் சேரவே
பனி போல் உடல் சிலிர்த்திடும்
As your tender lips stamp on our cheeks
Our body would become chill as ice

சில நாழிகை பிரியவே
உளம் ஏங்கியே தேடுமே
A short separation would dramatically increase the longing of the heart


குறிப்பு: “எங்கள் பிள்ளைச் செல்லம்” என்பதை மாற்றி குழந்தையின் பெயரை இணைத்துப் பாடலாம்

Note: 'beloved child" could be replaced with the name of the child as required.