Ramadhane Ramadhane Rammiyam


LYRICS


ரமழானே ரமழானே 
ரம்மியம் ஓங்கும் ரமழானே 
ரஹ்மத்தாய் காத்தருள 
ரப்பிடம் நீ சொல்வாயே!
 
திவ்விய குர்ஆன் ஓதிடுவோம் 
திக்ருகள் பலவும் செய்திடுவோம் தராவீஹைத் தொழுதிடுவோம் தய்யானிடம் நீ சொல்வாயே!

நல்லருளும் மஃபிரத்தும்  
நாச நரகின் விடுதலையும் 
நயமுடனே அருளிடவே 
நாயனிடம் நீ சொல்வாயே! 
 
லைலத்துல் கத்ர் இரவாம்
ஆயிரம் மாதத்தை விட சிறப்பாம்
இலட்சியமோடு அடைந்திடுவோம் இறையோனிடம் நீ சொல்வாயே!

ஏழை எளியோர் பசியுணர்வோம் 
ஏற்றமாக நோன்பிருப்போம் 
ஏழை வரிகள் கொடுத்திடுவோம்  ஏகனிடம் நீ சொல்வாயே!

பள்ளி தைக்கா யாவினிலும் 
பண்பாய் கூடி வணங்கிடுவோம் 
தொல்லைகள் இல்லா வாழ்வளிக்க 
துய்யோனிடம் நீ சொல்வாயே!

சூது வாதுகள் வீழ்ந்திடவே
சதிகள் யாவும் சரிந்திடவே
ஓதும் ஸலவாத் பயன் தரவே 
அல்லாஹ்விடம் நீ சொல்வாயே!

நூஹின் மகனார் இஸ்மாயீல்  
நவிலும் இந்த முனாஜாத்தை    
நேயமுடனே படிப்போர்க்கும் 
நிறைவாய் அருள சொல்வாயே!

ஸல்லி வ சல்லிம் அலன்னபி் 
தும்ம ஆலின் வ அஸ்ஹாபி  
ஸல்லி வ சல்லிம் அலல் ஹபீப்  
தும்ம அஹ்லிஹி வ அஹ்பாபி!

ஆக்கம்: என்டி. முஹம்மது இஸ்மாயீல் புகாரி