அமுதை ஊட்டும்
எங்கள் சங்கம் வாழ்கவே
அறிவின் சுடரை ஏற்றும்
மன்றம் வளர்கவே
மண் மேல் முதலாய் மலர்ந்த
முதுமொழி...
மணமாய் எங்கும் விரிந்த
தமிழ் மொழி...
இளமை பருவத்திலே
இதமாய் பதிய வைத்தே
உணர்வை விதைத்திடவே
உழைத்திடும் கல்விக் கூடம்
தாயகம் பிரிந்தே
பொருள் தன்னை தேடிடவே
அயல் நாட்டிலே
குடியேறினோம் பறந்தே
தாகம் தீர்த்திடவே ஒரு
தாயைப் போலணைத்தே
தமிழ்ப் பாலையே
எமக் கூட்டினாய் இனிதாய்
வாழ்க்கை நெறியினையும்
வளமான கல்வியையும்
விளையாட்டையும்
ஒன்றாகவே... பயில்வோம்
வேற்றுமை களைந்து
சமயங்களைக் கடந்து
மனிதம் தனை
நிலை நாட்டியே
உயர்வோம்
காலம் உள்ள வரை
உன் சேவை தொடர்ந்திடவே
கரம் ஏந்தியே இறையோனிடம்
கேட்போம்
ஞானம் தந்திடும் எம்
ஆசான்கள் வாழ்வினிலே
நலமோங்கவே நாம் வாழ்த்தியே
மகிழ்வோம்
கவி: B.S அஹ்மது ஸாலிஹ் ஃபஹீமி