கண்ணான நபியுல்லாஹ்


LYRICS


கண்ணான நபியுல்லாஹ்
கருணை உம் வடிவிலா
துதிப்பேனே நாளெல்லாம்
தூயோன் ரஸூலுல்லாஹ்
என் இதய வெண்ணிலா
என் காதல் கண்ணிலா
கார் மேகக் குடையிலா (கண்ணான)

தேன்மதுரப் பேச்சிலா
தென்றல் உம் மூச்சிலா
கஸ்தூரி மணத்திலா
குளிரூட்டும் கரத்திலா
பொன்னார்ந்த அழகிலா
பூதூவும் சிரிப்பிலா
மறை தந்த நெஞ்சிலா
இறை தோய்ந்த ஒளியிலா
பேரின்ப தீன் நிலா
தாஹா ரஸூலுல்லாஹ் (கண்ணான)

என் நினைவு உம்மிலா
உம் பார்வை தன்னிலா
கற்கண்டு நாக்கிலா
கனிவான வாக்கிலா
நோய் தீர்க்கும் உமிழிலா
மன்றாடும் பரிவிலா
பெருமானை ஆவலா
அழைப்பேனே நாளெல்லாம்
எளியோரின் உயிர் உலா
ஹக்கோன் ஹபீபுல்லாஹ் (கண்ணான)

கவி ஆக்கம்: புரவலர் போர்த்திய பொன்னாடை என்ற பெயரில் புனித புர்தா ஷரீபிற்கு தமிழில் தரமான விளக்க உரை வழங்கியவரும் மற்றும் பல அருமையான நூற்களை தமிழில் தந்தவருமான மௌலானா N.S.N. முஹம்மது அப்துல் காதிர் பாகவி அவர்களின் மகள் சாஹிபா ஸலீமா பானு அவர்கள்