Fathima Nayagiyar Malai- Song 1


LYRICS


Fathima Fathima

Binthar Rasool Fathima
Bidhar Rasool Fathima
Kabidar Rasool Fathima

Aynar Rasool Fathima
Noorar Rasool Fathima

Zahra Bathool Fathima
Zawjal Ali(yyi) - Fathima
Ummil Husain - Fathima

Yaa Seyyidaah  - Fathima
Yaa Taahiraah - Fathima 
Yaa Haaliraah - Fathima
Yaa Zaahiraah……...

Yaa Haaniya - Fathima
Yaa Raaqiya  - Fathima
Yaa Qaayima  - Fathima 
Yaa Qaanitaah  - Fathima 
Yaa Kaalimah - Fathima 
Yaa Naasiya  - Fathima 
Yaa Nooriyah - Fathima 

Yaa Saayima 
Yaa Saalihaah  - Fathima
Yaa Saadiqah - Fathima
Yaa Zahidah
Yaa Aalima
Yaa Abidah
Yaa Aaliyah

Yaa Waafiya  - Fathima 
Yaa Dayiya
Yaa Shafiah
Yaa Shahidadh
Yaa Zaahiraah……...

1.  பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீ மென்றோதி
இஸ்லாத்தின் நாயகியை இனிதாய் புகழ்வோமே

2.  எல்லாப்பு கழினையும் இறையோற் குரித்தாக்கி
வல்லார் நபீமீது வாகாய் ஸலாத்துரைப்போம்

CH1:
3.  மற்றும் கிளையார்கள் மணமான ஸஹ்பு மீதும்
பற்றாகக் கூறுகிறோம் பதியே யருள் புரிவாய்

4.  ஆலமடங் களுக்கும் அதிபதியாய் வந்துதித்து
நீலக்கடற் சூழுலகை நேராக்கி வைத்தார்கள்

5.  விலங்குகளும் மாந்தர்களும் வேறுஜின்கள் கற்கரடும்
மலாஇகா மாரவரும் மண்விண்கால் நீர் நெருப்பும்

6.  மதியிரவி மற்றுமுள்ள மண்டலங்கள் கோளங்களும்
அதிபதியாம் மாநபிக்கு அடங்கி நடந்தனவே

7.  மண்ணே ழடுக்குகளும் விண்ணே ழடுக்குகளும்
கண்ணாகப் போற்றிநின்ற காஸீம்நபி யைத்துதிப்போம்

CH2:

8.  இதுநிற்க வெடுத்துக் கொண்ட இனியநபி தம்மகளார்
மதிமிக்க பாத்திமத்து வண்ணமகள் காதைசொல்வாம்

9.  தீயவர்கள் தூற்றுவார்கள் தூயவர்கள் போற்றுவார்கள்
நாயகி பாத்திமத்தை நாம்போற்றிப் புகழ்வோமே


10.  பாத்திமா நாயகியைப் பரிவாய் வளர்த்தநபி
மாத்துயர்கள் வந்திடாமல் மனங்கலங்க வைக்காமல்


11.  நேமமாய் வாழும்வழி நேர்படுத்தி வைத்தார்கள்
தீமைகள் சேராமல் தீயவைக ளண்டாமல்

12.  தூயவழி யில்வளர்ந்தார் தூதர்மகள் பாத்திமத்தே
ஆயும் வணக்கமெல்லாம் அழகாகச் செய்துவந்தார்

CH3:
13.  நாயகத் திருமேனி நபிப்பட்டம் பெறுவதற்கு
ஆயவைந் தாண்டுக்குமுன் னவதரித்தார் பாத்திமத்தே

14.  அவ்வாண்டிற் றான்கஃபா ஆண்டுடைந்து குரைஷியர்கள்
செவ்வைப்ப டுத்தினார்கள் சீராய்வ ணங்கிடற்கு

15.  கதீஜா நாயகியார் கனிவான பாத்திமத்தை
கதியென்னப் பெற்றெடுத்தார் கருத்தா வருளாலே

16.  பாத்திமா நாயகியார் பரிவாய்ப் பிறந்தவன்றிற்
கோத்திரங்கள் கேடுகெட்டுக் குறைகுற்ற முற்றார்கள்

17.  கொலைசூது கொடுநடத்தை கொடுங்கொள்ளை சுடுவார்த்தை
சிலைவணக்க மற்றுமெல்லாம் தினமும் நடந்தனகாண்

CH4:
18.  மாதர்தம்மை அடிமைகளாய் மனம்போன போக்கிலெல்லாம்
வேதனைகள் செய்துவிலை மாதுகளாய் வைத்துவந்தார்

19.  நீதிகெட நடந்துகொண்டார் நீசமக்கட் கூட்டமெல்லாம்
தீதார்ந்த வக்காலை சீர்குழந்தை பிறந்ததம்மா

20.  திருநபியுந் தம்மினத்தார் திருந்தி இறைவழுத்தி
கருத்தாவை வணங்கிநின்றார் கனிவோடு காலமெல்லாம்

21.  நபிநாதர் கோத்திரமாம் ஆண்பெண்கள் யாவருமே
தபமிக்கா ரென்றுமக்கள் சதமும் புகழ்ந்துரைத்தார்

22.  நாயக மவர்களுடன் நல்லார் கதீஜாவும்
தூயநல் வாழ்வதனில் துய்த்தே இருந்தார்கள்

CH5:
23.  ஆயத் தெளிந்தவராம் அருமை கதீஜாவும்
சீய நபியவர்க்குச் சிறப்பா யுதவிசெய்தார்

24.  நம்பிக்கை யுடையரென்னும் நற்பெயரா மல்அமீனும்
நம்நபிக்கே யிட்டதுபோல் நாயகிக்கு மிட்டார்கள்

25.  தூயவராம் கதிஜாவுக்கு தாஹிரா என்னும்பெயர்
நேயமா யிட்டார்கள் நீதமுள்ள மானிடர்தாம்

26.  அவ்வாறே நாயகியார் அருண்மிக்க பாத்திமத்தும்
செவ்வையாம் பெண்களுள்ளே சீரான மாதரானார்

27.  மழலைகளாம் பெண்மக்களை மண்ணினிலே உயிருடனே
வழமையாய்ப் புதைத்துவந்தார் மனமில்லா மாந்தர்கணம்

28.  அன்பும் பண்பும் அழகா யமைந்தநபி
பெண்களுக்கு வாழ்வளித்தார் பேயர்கள் வாழுகையில்

29.  பெண்களுக்குப் பேறளித்துப் பெருமை யடையச்செய்த
கண்மணி பாத்திமத்தைக் கணந்தோறும் போற்றிடுவோம்

AUTHOR:  J.S.K.A.A.H MOWLANA