Badriyyeen Munajaath


LYRICS


பதுரீன்கள் முனாஜாத் மாலை:-

 

1). மண்ணில் பிறந்து ஹயாதா யிருக்கும் நாள்

மன்னர் பதுரீங்கள் காவலில் லாக்கள்ளாஹ்

 

2). துக்கம் பலாயும் வபாவும் அணுகாமல்

தூயவர் பதுரீன்கள் காவலில் லாக்கள்ளாஹ்

 

3). உண்ணும் உணவும் முதலும் சுருங்காமல்

உண்மை பதுரீன்கள் காவலில் லாக்கள்ளாஹ்

 

4). இன்னும் மெளத்தின் வேளைலேசு கிடைக்கவும்

எங்கள் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

5). அறிவு குலையும் மரண சமயத்தில்

அஸூஹாபுல் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

6). முற்றும் இருண்ட கபுரில் அடங்கும் நாள்

மூத்தோர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

7). தீராத நிஉமத் செய்யும் சமயத்தில்

தீரர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

8. அல்லல் மிகுந்த ஹஷ்ரில் கூடும்நாள்

அன்பர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

9).உல்லாச மில்லா நேரம் உதிக்கும் நாள்

உம்பர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

10). கூட்டத் தார்ல்லா ஹிஸாபுடைய நேரத்தில்

குணத்தோர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

11). ஏறிய சூட்டினால் கரிக்கும் நேரத்தில்

ஏகர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

12). சீறிய நரகங்கள் கோபிக்கும் நேரத்தில்

சீலர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

13). அதிகம் கூர்மையுள்ள பாலம் கடக்கும்நாள்

அரசர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

14). அதுபோலு மின்னும் என் தாய் பிதாவையும்
அறிவைக் கற்பித்த உஸ்தாது மாரையும்

 

15). இதமான இக்வானும் அகவாத்து மற்றுள்ள
இரஸூல் நபியின் உம்மத்தானோர் எல்லாரும்

 

16). அஸ்ஹாபுல் பதிரிய் யீன்கள் பொருட்டாலும்
அதுனென்னும் சுவர்க்கத்தில் சேர்த்தருள் யா அள்ளாஹ்

 

17). அவனியில் என்னில் மானக்கேடோன் றில்லாமல்

அதிகம் நிஉமத்தாய் மெளத்தாக்கும் வேளையில்

 

18). நல்ல ஷஹாத த்தும் ஈமானும் ஈந்தருள்
நாதர் பதுரீன்கள் பொருட்டாலே யாஅள்ளாஹ்

 

19). இவர்கட்கு நியம மாய் உன் தன் ரிளாதன்னை

ஈந்தருள் அஹதான யாரப்பீ யாஅள்ளாஹ்

 

20). நபிநாயகம் மீதில் உன்தன் ஸலவாத்தும்
நல்ல ஸலாமும் வழங்குவாய் யாஅள்ளாஹ்

 

21 ம் பாட்டிலிருந்து 38 வரை உள்ளவை சங்கையான மேன்மையான உயர்வான அருளான குரு மஹான் *ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள் இயற்றியது

 

21). பெற்ற என்தாய் தந்தை அபாக்கள் மீதும்
பிழை பொறு பதுரீன்கள் பொருட்டாலே யா அள்ளாஹ்

 

22). சுற்றத்தார்கள் சோதரர்கள் யாவரையும்
சோதனை யின்றிக் காத்தருள்வாய் நீ யா அள்ளாஹ்

 

23). மக்கள் வாழ்வை வளம் கொழிக்கச் செய்வாயே

மணமாய் அவர்கள் ஹயாத்தை நீடிப்பாய் அள்ளாஹ்

 

24). தக்க எங்கள் சந்ததிகள் யாவரையும்
தகையோர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

25). கபுரிலிருந்து எழுப்பும் நாள்வரை பர்ஸகிலே
காத்தருள் உடலுயிரை நீயே யா அள்ளாஹ்

 

26). போகும் எங்கள் ஸபரிலுள்ள நாட்டத்தை
பூர்த்தியாக்கு பதுரீன்கள் பொருட் டாலள்ளாஹ்

 

27). ஸபரில் ஆபத்துக்கள் வந்து அணுகாமல்
தவத்தோர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

28). பகைவர் வஞ்சகர்கள் கெடுதி நேராமல்
மகிமை பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

29). எங்களெதிரிகள் எம்மைத் தாக்க வரும்போது
பங்கம் விளைத்தே எம்மை அழிக்க வரும்போது

 

30). எங்கள் சொத்து வீடு முதலாம் உடைமைகள்
எடுத்தோ எரித்தோ அழிக்க அணுகி வரும்போதும்

 

31). அல்லா ஹ்வே உன் படை வீரரான பதுரீன்கள்
எல்லார் உதவியும் தந்தருள் காதிரே அள்ளாஹ்

 

32). எங்கள் பெண்கள் குழந்தையர் முதியோர் தம்மை
எங்கும் எப்போதும் அவர்தம் மானத்தை

 

33). பிறப்பு முதலாம் இறப்புவரையும் யாரப்பீ
சிறந்தோர் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

34). உன்னை நம்பும் உன்தன் கூட்டத்தாரெம்மை
என்றும் பதுரீன்கள் காவலி லாக்கள்ளாஹ்

 

35). எம் குடும்பம் கோத்திரத்தார் யாவரையும்

இனியவர் பதுரீன்கள் காவலிலாக்கள்ளாஹ்

 

36). சிர்க்கு என்னும் பெரியபாபம் சேராமல்
சீரிய தெளஹீதில் ஈமானைத் தா அள்ளாஹ்

 

37). எங்கள் கண்மணி நாயகத்தின் சபாஅத்தஈந்தருள்
இறுதி நாள்தில் ரப்பியீயா அள்ளாஹ்

 

38). ஸல்லல்லாஹூ அலாநபீனா வஸல்லம்
வஅஸ்ஹாபின் வஅஅஹ்லிபைத்தி ரசூலில்லாஹ்

 

ஆமீன் ஆமீன் ஆமீன் யாஅல்லாஹ்