யா அலி மகராஜரே رضي الله عنه
ஞானக் கோட்டையின் மோன வாசல், அல்லாஹ்வின் அரிமா, அகழ் யுத்த புகழ் வாணர், மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாண்புயர் மருகர், வீரமும் நீதமும் நிறைந்த வாள் வீரர்:
ஸெய்யிதினா ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு
அவர்களின் விவேகத்தை சுட்டும் அற்புதப்பாடல் இது.
நூறாண்டுகளைக் கடந்தும் நூர்ந்திடாத இப்பாடலின் சொல் வீச்சில் அலி நாயகத்தின் வாள் வீச்சின் சப்தம் தொனிக்கும். கேளுங்களேன்.
============
،قال رسول الله صلى الله عليه وسلم
انا المنذر وعلي الهادي، وبك يا علي يهتدي المهتدون من بعدي
(ابن عساكر في تاريخ دمشق)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன். அலி அவர்கள், நேர்வழி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். மேலும் அலி அவர்களே! உங்களைக் கொண்டு (இறை ஒளியின் பக்கம்) நேர்வழி பெறக் கூடியவர்கள் (சூஃபியாக்கள்), நேர்வழி பெறுவார்கள்.
========
நடன மலர் பதம் திடன தரவர
கடன அலி மகராஜரே
அடரும் குஃபிரரை இடர பதிதனில்
ஆக்கிரமித்துயிர் போக்கவே
அமரரெவர்களும் குமுறவோசை
விட்டறுக்கும் அலி மகராஜரே
புவனம் தனில் பொல்லா
கொடியன் இபுலியன்
பொங்கும் மதீனாவில் வளையவே
ககன மெறிந்துடும் துல்துல் ஏறியே
கடிந்து உயிர் பிளவாக்கினோர்
மாதர்க் கரசியர் பாத்திமா
மணவாள ரெனும் விசுவாசரே
திரு வலியோன் அர்ஷினில் புலியதாகிய
வள்ளல் நபி மருகேசரே