அல்வதா மாஹே ரமழான்
சென்று வா மாண்பு ரமழான்
கவி: அல்ஹாஜ் கம்பல்பக்ஷ் S.H. பாக்கர் ஸாஹிப் ஃபஹீமீ
நேசராம் ஆஷிகீன் நெஞ்சம் நோக
பாச ரமழா னெமை நீங்கி போ(கி)றாய்
உன்னைப் பிரியும் துயர் நீங்கிடாதே
சென்று வா சென்று வா மாண்பு ரமழான்
அல்வதா அல்வதா மாஹே ரமழான்
அல்வதா அல்வதா மாஹே غகுفப்ரான்
உந்தன் வரவாலே உள்ளம் மகிழ்ந்தோம்
நிதம் வணங்குதற் கார்வம் மிகுத்தோம்
ஐயகோ நெஞ்சம் நோகுதே இன்று
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
உந்தன் நேசர்கள் கண்கள் கலங்க
உள்ளம் நொறுங்கி நிலை மாறுகின்றோம்
எம்மின் துயரை எவர் நீக்குவாரோ
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
இனிய இப்தாரில் இன்பங்கள் கண்டோம்
பிரிசமாய் சஹ்று நேரம் மகிழ்ந்தோம்
இவை எல்லாமே இனி இல்லை இல்லை
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
உந்தன் பிரிவை மனம் ஏற்றிடாமல்
பிள்ளை பிரிந்து அழும் தாய் போல் ஆனோம்
நாளை இறை முன்னில் நல் சான்று சொல்வாய்
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
நன்மை எது ஒன்றும் செய்யாமல் கடந்தோம்
கண்ணீர் துளி ஒன்றே விழி மீதில் கண்டோம்
இறையை மன்றாடி பவம் போக்கச் செய்வாய்
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
அருள் சேர்க்கும் நலம் நல்கும் ரமழான்
பல கோடி ஸலாமுன் மேல் ரமழான்
ஸலாமுன் அலைக் யா ஷஹ்ர ரமழான்
ஸலாமுன் அலைக் யா ஷஹ்ரல் غகுفப்ரான்
மீண்டும் வருமாண்டில் மீண்டு நீ வருவாய்
மாண்டுப் போகாமல் உனைக் காண வேண்டும்
என் செய்வேன் என் விதியை நான் அறியேன்
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
கருணை நபி நாதர் அண்ணல் பொருட்டால்
மறுமை அந்நாளில் மறவாது காப்பாய்
மன்னோன் திருக் காட்சி மன்றாடி தருவாய்
அல்வதா அல்வதா சங்கை ரமழான்
எம்மின் உயிருக்கு உயிரான நபியின்
மணம் பொங்கும் மதீனா நன்னகரில்
வருமின்ப ரமழானைக் காண
அருள்வாயே அருள்வா யெம்மிறைவா
ஆமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்