Eidul Fitr Nasheed:
اَللّٰهُ اَكْبَرُ، اَللّٰهُ اَكْبَرُ
اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
حَمْدُنَا لِلّٰه، حَمْدُنَا لِلّٰه
حَمْدُنَا لِلّٰه، حَمْدُنَا لِلّٰه
اِخْوَةُ الْمُسْلِمِيْنَ، وَ اَنْتُمْ بِخَيْرْ
كُلَّ عَامٍ وَّصُلْحٍ بِرَأْفَةِ الله
عِيْدَ الْفِطْرِ، عِيْدَ الْخَيْرِ
بِمُحَيَّا مُنِيْرْ، اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
شَهْرُ اُمَّةِ سَيِّدِ الْأَنْبِيآءِ
شَهْرُ رَمَضَانَ فِيْهِ بَرَكَةُ الله
كُلٌّ صَوَّامُوْنْ، لَيْلاً قَوَّامُوْنْ
بِمُحَيَّا مُنِيْرْ، اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
شَهْرُ الصَّبْرِ مُوَاسَاةٍ بَيْنَ الْفُقَرَآء
بِالزَّكَاةِ وَالصَّدَقَاتِ سِرًّا جَهْرًا
كُلُّ الْمُسْلِمِيْنَ، يَبْذُلُوْنَهُمَا
بِمُحَيَّا مُنِيْرْ، اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
نَحْنُ اَخْلَالٌ سِلْمِيَّةٌ نُّهَنِّيْ
بِنَشَاطٍ تَبَسُّمٍ وَّالْهَنَآءِ
بِطُوْلِ عُمْرِنَا اِدَامِ عَمَلِنَا
بِمُحَيَّا مُنِيْرْ، اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
يَا رَبَّنَا اَنْعِمَنْ اَكْرِمْنَا
بِمَحَضِ نَعْمَائِكَ وَامْنَحْنَا
بِأَشْهَرِ الشَّهْرِ، وَ لَيْلَةِ الْقَدْرِ
بِمُحَيَّا مُنِيْرْ، اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
صَلِّ سَلِّمْ عَلٰى سَيِّدِ الرُّسُلِ
مُحَمَّدِنِ الْهَمْهَامْ
آلٍ ثُمَّ صَحْبٍ، قُطْبِ أَعْظَمْ أَشْهَرْ
بِمُحَيَّا مُنِيْرْ، اَللّٰهُ اَكْبَرُ، لِلّٰهِ الْحَمْدُ
مُصَنِّفْ:
نَحْوِيْ سَيِّدْ اَحْمَدْ اَبُوا الدُّرِّ
اِبْنُ النَّحْوِيْ اِسْحَاقْ لَبَّيْهِ الْعَالِمِ الْمَرْحُوْمِ عَفَا عَنْهُمَا
அல்லாஹ் பெரியவன் (4 முறை)
எங்களின் புகழ் அல்லாஹ்வுக்கே (4 முறை)
1) முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாள்,
நலமிகு பெருநாள் தினங்களில், ஒளிமயமான வதனத்துடன்,
அல்லாஹ்வின் கிருபையால் நலமுடன் இணக்கத்தோடு திகழுங்கள்.
2) நபிமார்களின் தலைவர் ﷺ அவர்களின் சமுதாயத்தின் மாதம் ரமழான் மாதமாகும்.
அம்மாதத்திலே அல்லாஹ்வின் அளவிலா அபிவிருத்தி உண்டு.
அனைத்து மக்களும் ஒளிமிக்க முகத்துடன் (பகலெல்லாம்) விரதமிருந்து
இரவெல்லாம் வணக்க வழிபாட்டில் திளைப்பார்கள்.
3) ரமழான் மாதம் பொறுமையின் மாதமாகும்.
இரகசியமாகவும், பரகசியமாகவும் ஸதகா, ஜகாத் எனும் தர்மங்களை
வறுமை, ஏழ்மை உடையவர்களின் மத்தியில் வாரி வழங்கும் மாதமாகும்.
அந்த தர்மங்களை அனைத்து (வசதியுற்ற) முஸ்லிம்கள் இன்முகத்துடன் வழங்குவார்கள்.
4) நாங்கள் ஒற்றுமையை நிலை பெறச் செய்யும் நேசம் மிகுந்த பாசமிகும் நண்பர்கள்.
நீண்ட ஆயுளுக்காகவும், தொய்வில்லா நற்கிரிகைகளுக்காகவும் முகமலர்ச்சியுடன்,
உற்சாகம் பொங்க குதூகலத்துடன் பெருநாள் நல்வாழ்த்தினை வழங்குகிறோம்.
5) எங்களின் இறைவா! உனது கலப்பற்ற அருளைக் கொண்டு எங்களை கண்ணியப்படுத்து.
நிஃமத்தைத் தந்தருள் சிறப்பிற்குரிய மாதத்தால்,
அம்மாதத்தில் மகிமைக்குரிய இரவாய்த் திகழும் “லைலதுல் கத்ரு” என்னும் கனதி மிகுந்த
நல்லிரவாலும் நாங்கள் முகமலர நல்கொடை வழங்குவாயாக.
6) இறைவா! வீரமிக்க, கொடை வள்ளலான மகிமை மிக்க தலைவரான ஹாமீம், முஹம்மத் ﷺ அவர்கள் மீதும்,
அவர்களின் குடும்பத்தார்கள், இனிய ஸஹாபாக்கள், குத்புல் அஃழம், குத்புல் அஷ்ஹர் (ரிளுவானுல்லாஹி அலைஹிம்) யாவரின் மீதும்
முகமலர்ந்த கருணையையும், ஈடேற்றத்தையும் வாரி வழங்குவாயாக
ஆக்கம்:
நஹ்வி I.L. செய்யிது அஹ்மது முத்துவாப்பா ஆலிம் ஃபாஸி