பிழை பொறுப்பாய் தயாளனே
ஆக்கம்: கவிஞர் அல்ஹாஃபிழ் N.T சதகதுல்லாஹ் காஹிரி
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யா ரப்பி ஸல்லி அலன் னபிய்யி முஹம்மதி
اَللّٰهُ زَادَ مُحَمَّدً تَكْرِيْمًا
صَلُّوْا عَلَيْهِ وَسَلِّموْا تَسْلِيْمًا
வான் புவி ஏழும் படைத்து ஆளும் வல்லவா
நீதி வழுவா தெல்லா உயிரையும் காப்பவா
தீனோர் உன் சன்னிதி கைகளேந்தி நிற்கின்றோம்
கண்ணீர் துடைத்தெம் பிழை பொறுப்பாய் தயாளனே
தாயினும் மேலாம் கருணையான மன்னவா
தாரணி வாழ்வில் வேதனை ஏன் நாயனே
அறிந்தறியாமல் பாவங்கள் மிகைத்ததே
அடிமைகள் எம்மை காத்திடு அன்பாளனே
நோயுள்ளமாகி தீதுகள் விளைந்ததே
சேதங்களெம்மில் சேர்த்திடாதே தூயவா
நாதனே உந்தன் போதங்கள் மறந்ததால்
கோபக் கணைகள் வீசிடாதே முன்னவா
மண்ணூரில் எம்மை மன்னித்தருள வேண்டுமே
மன்னானே நீ அல்லாது யாரும் இல்லையே
உன்னை நினைந்து தாழ் பணிந்தோம் தயாபரா
எங்களின் தவ்பாவை ஏற்றருள் புரிந்திடு
பேரழிலாம் பெருமான் முஹம்மதின் பொருட்டினால்
பேராளனே தீன் பாதைகள் துலக்கிடு
கேடான நரகினில் வீழ்ந்திடாது உய்யவே
காவலனே தவ்பாவின் வாயிலை திறந்திடு
اَللّٰهُ زَادَ مُحَمَّدً تَكْرِيْمًا
صَلُّوْا عَلَيْهِ وَسَلِّموْا تَسْلِيْمًا
யா ரப்பனா யா ரப்பனா யா ரப்பனா
யா ரப்பி ஸல்லி அலன்னபிய்யி முஹம்மதி