காயல் பதியில் மறைந்து வாழும் அல்லாமா ஷைகு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் அன்னவர்களின் வழி வந்த மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் பா.சு முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை ஆலிம் அவர்கள் யாத்தளித்த புகழ்ப்பா
பல்லாயிரம் நாவால் பாடினும் போதாது
பாக்ய தைக்கா சாகிபை
வெல்லமுதம் பொழியும் வல்ல சற்குருவவர்
சொல்ல வொண்ணாப் புகழை
அல்லுபகலோயாமல் (பல்லாயிரம்)
நீதிமறைப் பொருளைப் போதித்தவரின் மனப்
பீதிபோக்கி சாத்வீக வீதிதனைப் பயிற்றி
ஆதியிடத்தில் மிக சாதித்தருளுமே
காதிபதியையிந்த பூதலத் தோர்கள் கூடி
வான் மதினீறீந்த கோமானுமெறொலி சேய்
நேமதவத்து தித்த பூமான் ரவுலாவிலுயர்
மேன்மை குலத்தொருவர் நேமகஞ்செய்யவே
தாமே பால்கனிதோற்றும் வாமப்ர பந்தத்தை ..
மார்க்க நிபுணருலமாக்கள் பரவுங்காஹி
ரூர்க்கதி பதியாய் வந்தார்க்கு மனத்தகையை
தீர்க்கும் பவப்பிணியைக் காக்கும் பரகதியில்
சேர்க்குங்காருண்ய ரென்றேற்கு மப்துல்லாவொடு