صَلُّوْا عَلَى الْحَبِيْبْ
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
கருணைக் கடலே கவினுறு மலரே
காவியம் போற்றும் காருண்ய நிலவே
கனிவின் நிறைவன்றோ!
கலங்கரை விளக்கன்றோ!
காசினி அருளன்றோ!
ஸலவாத் ஓதின் கவலை நீங்கி
சஞ்சலம் அகலுமன்றோ!
நிம்மதி நிலைக்குமன்றோ!
நிறைவை தருமன்றோ!
ஒன்றுக்கு பத்து நன்மைகள் உண்டு
இறைவன் தருவான் அள்ளியே அன்று
இதுவே மெய்யன்றோ!
இரஸுல் மொழியன்றோ!
இருலோக ஜெயமன்றோ!
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
நானும் எனது அமரர்களும்
நயமிகு ஸலவாத் நபி மீது
மகிழ்வாய் நாளும் நவில்கின்றோம்
நல்லடியாரே உரைப்பீரே!
அருளாளன் அடியாரை விளித்தே
அன்றே பகர்ந்தான் அருள் மறையில்
اَلّٰلهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَ
عَلٰى عِتْرَةِ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ
ஆதி தந்தை ஆதம் நபியும்
அவர் தம் துணைவியர் ஹவ்வாவும்
மங்களமான வாழ்வினில் இணைய
மஹராய் வைத்த சன்மானம்
சந்தன மணங் கமழ் சுந்தர நபி மேல்
சுகந்த மேவும் ஸலவாத்தையே
[கருணைக் கடலே]
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
இறையிடம் கெஞ்சிக் கேட்டாலும்
கைகளிரண்டும் உயர்ந்தாலும்
கரைந்துக் கண்கள் பணிந்தாலும்
இறைஞ்சல் முழுமை அடையாது
முன்னும் பின்னும் ஸலவாத் ஓதின்
அர்ஷில் சேர்ந்து பலன் தருமே
اَلّٰلهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ
وَعَلٰى عِتْرَةِ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ
முந்தைய சமூகம் எவர் மீதும்
விதிக்கப்படாத நல் ஸலவாத்
உத்தம நபியின் உம்மதினர்க்கு
உண்மை இறைவன் பரிசளித்தான்
சங்கடம் நீங்கி மங்கலம் பொங்க
சங்கை ஸலவாத் மொழிந்திடுவோம்
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
[கருணைக் கடலே]
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ