Dheen Kondu Vandha


LYRICS


பயகம்பரின் புகழைப் பாடுவோம்

 

ஆக்கம்:

முஹிப்புல் உலமா அல்ஹாஜ்
A. முஹம்மது மஃரூப் (துபாய்)

 

தீன் கொண்டு வந்த

திருமறையும் தந்த

திருந்தி மனிதன் வாழும் வழியை

திறந்துக் காட்டி வாழ்ந்த

திருநபியின் புகழைப் பாடுவோம்

 

பன்னிரண்டு நாளும்

பரவியமர்ந்து நாமும்

பயகம்பர் புகழைப் பாடுவோம்...

பாடிடுவோம் புகழைப் பாடிடுவோம்...

பாடிடுவோம்

பலனனைத்தும் அடைந்திடுவோம் நாமே...

பல்லாயிரம் பல்லாயிரமே

 

ரபீயுல் அவ்வல் மாதம்

ராகம் சேர்த்த கீதம்

ரஸூல் நபியின் புகழைப் பாடுவோம்...

பாடிடுவோம் புகழைப் பாடிடுவோம்...

பாடிடுவோம்

ராவு பகல் வாழ்வினில் என்னேரம்

ரம்யமான வாழ்வு கிடைக்குமே

 

அண்ணல் மேல் நம் பாசம்

அதிகமதிகம் ஆகும்

அழகு நபியின் புகழைப் பாடுவோம்…

பாடிடுவோம் புகழைப் பாடிடுவோம்...

பாடிடுவோம்

ஆண்டு முழுதும் அயராமல் நாமும்

அல்லாஹ்வின் அருளும் பொழியுமே

 

வாஞ்சை நபியைப் பாடும்

வாய்ப்பு நமக்கு போதும்

வள்ளல் நபியின் புகழைப் பாடுவோம்...

பாடிடுவோம் புகழைப் பாடிடுவோம்...

பாடிடுவோம்

வாழ்வினிலே ஆயுள் காலம் யாவும்

வசந்தம் வீசும் வளங்கள் பெருகுமே