Tikkut Tikandamum Kondadiye Vanthu


LYRICS


திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து

தீன் கூறி நிற்பர் கோடி!

 

 

சிம்மாசனாதிபர்கள் நதரேந்தியே வந்து

ஜெய ஜெயா வென்பர் கோடி!

 

ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் ஒலிமார்கள்

அணி அணியாய் நிற்பர் கோடி!

 

 

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞ்ஞானிகள்

அனைந்தருகில் நிற்பர் கோடி!

 

 

மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த

மன்னரே என்பர் கோடி!

 

 

வசனித்து நிற்கவே கொலு வீற்றிருக்கு மும்

மகிமை சொல வாயுமுண்டோ

 

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற

தவராஜ செம்மேருவே!

 

 

தயவு வைத்தெமை யாளும் சற்குணம் குடிகொண்ட

ஷாஹுல் ஹமீதரசரே!