விண்னொளி ஜோதியாய்…
கவி ஆக்கம்: காயல்பட்டணம் மர்ஹும் மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது உமர் கண்ணாடி ஆலிம் அவர்களின் மகன் கவிஞர் அல்ஹாஜ் விளக்கு S.A நெய்னா அவர்கள்
விண்னொளி ஜோதியாய் அண்ணலின்
பொன்மொழி மண்ணிலே மின்னுதே
கன்னலாய் கனிதரும் அமுதமாய்
விடியலின் கீதமாய் நபிகள் போதனை
வீணையின் நாதமாய் விளங்கும் சாதனை
வேதனை தீர்த்திடும் மானிடர் வாழ்வினில்
வேந்தரின் நல்லுரை நடைமுறை
மஞ்சினில் பீறிடும் பனியின் நீரைப் போல் --- என்
நெஞ்சினில் ஊறிடும் கனியின் சாரைப் போல்
விளைந்திடும் நன்மைகள் குவிந்திடும் கோடியாய்
வேந்தரின் வேதம்சொல் நடைமுறை
நிழல் தரும் சோலையின் மலரின் வாசமாய்
எழில் தரும் ஏற்றத்தில் மனித நேசமாய்
மாநிலம் தழைக்கவும் மானிடம் சிறக்கவும்
மன்னரின் மாண்புறும் நல்லுரை