فِدَاكَ وَالِدَيْنِ يَا رَسُولَ اللّٰه
فِدَاكَ أَهْلُنَا يَا حَبِيْبَ اللّٰه
فِدَاكَ قَلْبُنَا يَا نَبِيَّ اللّٰه
فِدَاكَ رُوْحُنَا يَا شَفِيْعَ اللّٰه
நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லாஹ் ﷺ
நீங்களின்றி நாங்கள் ஏது யா ரஸூல்லல்லாஹ் ﷺ
அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
அகிலமெங்கும் ஒளி தெளித்த யா ரஸூலல்லாஹ் ﷺ
மதீனா நகர்க்கொரு நாள் நான் வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நபியெனும் அருட் கடலில் நான் விழுவேன்
நபியே கதி என்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே
காணும் வரையில் கண்கள் தூங்காது
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது?
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது
ஒளியை தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மதென்ற பெருமையோடு வந்து சேருவேன்
உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
உம்மி ரஸூலே உங்கள் புகழ் பாடும்
அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
அல்லாஹ் போற்றும் மனித அணுகூலம்
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதய தீபமே
இறுதி தூதராக வந்த மறை ஞானமே