Mangalam Pongidum Ramadan


LYRICS


மங்கலம் பொங்கிடும் ரமழான்

மங்கலம் பொங்கிடும்

மாதமாம் ரமழான்

எங்கெங்கும் நிறைந்தோன்

ஏற்றிடும் ரமழான்

தங்க நபி நாதரும்

போற்றிடும் ரமழான்

 

இன்பங்கள் சேர்த்திடும்

இணையில்லா ரமழான்

பங்கங்கள் போக்கிடும்

பாக்கியம் ரமழான்

அங்கங்கள் பணியவே

செய்திடும் ரமழான்

=====

வானவர் இறங்கும்

வாசமாம் ரமழான்

பாவங்கள் கரிக்கும்

பாசமாம் ரமழான்

நேர் வழி செலுத்தும்

நேசமாம் ரமழான்

இறைக் காதலரின்

சுவாசமாம் ரமழான்

மர்ஹபன் அஹ்லன்

வஸஹ்லன் ரமழான்

வருகவே வருகவே

வாஞ்சையாம் ரமழான்

 

=====

தித்திக்கும் தேன் மறை

தெவிட்டிடாமல் நிதம்

வாஞ்சையாய் ஓதவே

வழி காட்டும் ரமழான்

திக்ரு ஸலவாத் தொலி

திக்கெங்கும் முழங்க

கல்பினில் பேரொளி

ஏற்றிடும் ரமழான்

=====

நாயனின் காட்சியை

கண்டிடும் ஆனந்தம்

இஃப்தாரின் பொழுதில்

தந்திடும் ரமழான்

மஹ்ஷரில் மன்றாடி

ரய்யானில் சேர்த்திடும்

நேய நோன்பதனை

நல்கிடும்  ரமழான்

=====

மங்கலம் பொங்கிடும்

மாதமாம் ரமழான்

எங்கெங்கும் நிறைந்தோன்

ஏற்றிடும் ரமழான்

தங்க நபி நாதரும்

போற்றிடும் ரமழான்

மர்ஹபன் அஹ்லன்

வஸஹ்லன் ரமழான்

வருகவே வருகவே

வாகையாம் ரமழான்

=====

வரிகள்: B.S அஹ்மது ஸாலிஹ் ஃபஹீமி