،قال رسول الله صلى الله عليه وسلم
انا المنذر وعلي الهادي، وبك يا علي يهتدي المهتدون من بعدي
(ابن عساكر في تاريخ دمشق)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்... நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன். அலி அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். மேலும் அலி அவர்களே! உங்களைக் கொண்டு (இறை ஒளியின் பக்கம்) நேர்வழி பெறக் கூடியவர்கள் (சூஃபியாக்கள்) நேர்வழி பெறுவார்கள். அறிவிப்பாளர்: இப்னு அஸாகிர் (தாரீகு திமிஷ்க்)
நடன மலர் பதம் திடன தரவர
கடன அலி மகராஜரே
அடரும் குஃபிரரை இடர பதிதனில்
ஆக்கிரமித்துயிர் போக்கவே
அமரரிவர்களும் குமர வோசை
விட்டறுக்கும் அலி மகராஜரே
புவனம் தனில் பொல்லா
கொடியன் இபுலியன்
பொங்கும் மதீனாவில் வளையவே
ககன மெறிந்துடும் துல்துல் ஏறியே
கடிந்து உயிர் பிளவாக்கினோர்
மாதர்க் கரசியர் ஃபாத்திமா
மணவாள ரெனும் விசுவாசரே
திரு வலியோன் அர்ஷினில் புலியதாகிய
வள்ளல் நபி மருகேசரே