பணமிருந்து என்ன பயன்
ஹஜ் பயணம் போகவில்லை என்றால்
கண்ணிருந்து என்ன பயன்
கஃபா கண்டு வரவில்லையென்றால்
மண்ணில் வாழ்ந்து என்ன பயன்
மதீனா மண்ணில் நடக்கவில்லையென்றால்
வசதி வந்து என்ன பயன்
ரவ்ழா வாசல் காணவில்லையென்றால்
செல்வத்தினால் வாங்கும் செல்வம் இந்த செல்வமே
மூஃமின் செலவு செய்து சேமிக்கின்ற இனிய திட்டமே
பூமியிலும் அர்ஷ் உண்டு புண்ணிய கஃபா
ஒரு புனித மிஃராஜ் நமக்கு அருளும் கண்ணிய கஃபா
இறைவனுக்கு மட்டும் அல்ல அங்கொரு வீடு
உண்டு இரசூல் நபி நாதருக்கும் அங்கொரு வீடு
திசை அனைத்தும் சங்கமிக்கும் மக்கா நகரம்
அங்கே திசையெல்லாம் கடந்து நிற்கும் அதிசய இல்லம்
வட்ட வட்டமாக மக்கள் சுற்றும் இல்லம்
உலகில் நட்ட நடு நாயகமாய் அமைந்திடும் இல்லம்
மண்ணறையில் இருந்தெழுந்து வந்த கூட்டமோ
வெண்மை ஆடையுடன் மஹ்ஷர் வெளி கூடி விட்டதோ
நாடு மொழி இனம் நிறங்கள் மறைந்து போனதோ
தீய வேற்றுமைகள் மறைந்த தனி உலகமானதோ
பாவங்கள் கண்ணீராக உருகி ஓடிடும்
நமது பழைய உயிர் மடிந்து புது உயிர் பிறந்திடும்
படைத்தவனின் எதிரில் இருக்கும் உணர்வு தோன்றிடும்
மீண்டும் பார்க்க என்று வருவதென்று மனது ஏங்கிடும்
இப்ராஹீம் நபியின் நினைவில் நெஞ்சம் மூழ்கிடும்
அருமை இஸ்மாயில் ஹாஜராவின் தியாகம் தோன்றிடும்
பெருமானார் வாழ்ந்த இடங்கள் சாட்சி கூறிடும்
அவை பேசுவதைப் போல ஒரு பிரம்மை தோன்றிடும்
கோடிக் கோடி பள்ளி வாசல் பூமி எங்குமே
அங்கு கூடிக் கூடி வணங்குகின்ற மக்கள் வெள்ளமே
கோடி முகம் ஒரு முகமாய் நோக்கி நிற்குமே
ஒரு நேர் கோட்டில் கிப்லாவால் இணைந்திருக்குமே
மதீனாவில் நுழைந்தவுடன் உயிர் துடித்திடும்
பேசும் வார்த்தை செத்து நெஞ்சம் மட்டும் நேரே பேசிடும்
இறந்து போக மனம் விரும்பும் நேரமாகிடும்
உள்ளம் என்றும் காணா உணர்வுகளை அனுபவித்திடும்
Lyrics by: Hussain Manbayee Hazrath