பாடல்: அஹ்மது நபியின் அழகிய நூராய்
கவி: உம்மு ஹபீபா ஆலிமா முஅஸ்கரிய்யா
Chorus:
S.H Muhammad Baqir &
A.S Qadrunnisa
அஹ்மது நபியின் அழகிய நூறாய்
அகிலம் ஒளியால் ஜொலிக்கும்
எண்ணத்தில் தவழும் அணையா தீபம்
ஏகன் தான் அருளாய் அளித்தான்
مِيْلاَدُ النَّبِيْ مِيْلاَدُ الْحَبِيْبْ عَلاَ مِيْلاَدِ خَيْرِ النَّبِيْ
பிரியவரின் பிறப்பால் உத்தமரின் உதயத்தால்
பிரபஞ்சம் பிரகாசம் அடைந்ததே
1) நற் குணத்தின் தாயகம் நீங்கள் தான் என்றே
நாயனும் நவின்றான் அன்றே
இறையவன் மறை போல் இனிதாய் குணமாய்
இரஸூல் நபியைப் படைத்தான்
2) ஆமினாவின் வயிற்றில் ஆற்றல் மிகு அன்பாளன்
அருட்சுடர் நேசரை அமைத்தான்
ரஹ்மதுன்லில் ஆலமீன் ராஜரைப் போற்றி
ரஹ்மான் மறையில் புகழ்ந்தான்
3) அண்ணலே தாங்கள் அவனியில் வந்ததால்
நிமலோன் நிலத்தினை அமைத்தான்
ஆதி நபி ஆதம் முதல் ஈஸா வரையில்
ஆலத்தை அஹதோன் அமைத்தான்
4) மங்களங்கள் பொங்கிடும் தங்கள் ஒளி முகத்தை
எங்களிரு கண்களால் காண
அங்கங்கள் தங்கமாய் இலங்கிடும் தங்களை
பங்கங்கள் நீங்கவே பார்க்கணும்
5) வஞ்சனைகள் சஞ்சலங்கள் வாகாய் நீங்கிடும்
வாஞ்சை நபிகள் வந்த நாள்
அஞ்சிடும் நெஞ்சமும் தஞ்சமே தந்திடும்
பிஞ்சு மனம் கொண்ட சிங்கம் பிறந்த நாள்